ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்….
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து ஓடினாலும் அதன் கிளை நதிகள் தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் செல்கிறது. இந்த நதிகளின் மூலம் பயன்படும் தாமிரபரணி வடிகால் குளங்களில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏ ட்ரீ என்ற தன்னார்வ அமைப்புடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது பறவைகளின் இனம், வசிப்பிடம், கூடுகள், எச்சம், உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுக்கப்படும். மேலும் பறவைகள் கணக்கெடுப்பு பதிவுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 வகையான சுமார் 24 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள சூழலில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள நயினார் குளத்திலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. தொலை நோக்கு கருவிகள் மூலம் நேரில் கண்டு பறவைகளை கணக்கீடு செய்தனர். நயினார்குளத்தில் 10 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் உள்ளது. இதில் நீலத்தலை கோழி, பாம்புதாரா, நீலசிறகு வாத்து, சென்டுவாத்து, மூக்கு தாரா, ஜம்புநாரை என பல்வேறு வகையான பறவைகள் காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது. சில வெளிநாட்டு பறவைகளும் குளங்களில் தென்படுகின்றன. கடந்த முறை கணக்கெடுப்பில் 70 வகையான 24 ஆயிரம் பறவைகள் தெரியவந்தது. இந்த ஆண்டு இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..