நடிகர் அபிநய் (44) காலமானார்: தனுஷ் அறிமுகப்படத்தின் நட்சத்திரம் கல்லீரல் நோயால் பயணம் முடிந்தது – சினிமா சங்கம் இறுதி சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர் அபிநய் நவம்பர் 10, 2025 அதிகாலை 4 மணிக்கு சென்னையில் கல்லீரல் நோயால் 44 வயதில் காலமாகிவிட்டார். தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ (2002) மூலம் சினிமாவில் நுழைந்த அபிநய், சென்ற சில வருடங்களாக உடல்நலக் குறைவால் கடுமையான போராட்டத்தில் வாழ்ந்து வந்தார்

Actor Abhinay Dies at 44 After Prolonged Liver Disease Battle - Dhanush's Debut Co-Star Passes Away in Chennai

அபிநய் உடலை வைத்து தவிக்கும் நண்பர்கள். கண் கலங்க வைக்கும் நடிகரின் கடைசி நிமிடங்கள்..

YearFilmLanguageNotes
2002துள்ளுவதோ இளமைTamilDebut with Dhanush
2002JjunctionTamilLead role
2004சிங்கார சென்னைTamilLead role
2005Pon MegalaiTamilTitle role
2006கையெத்தும் தூரத்துMalayalamFahadh Faasil’s film
2009சொல்ல சொல்ல இனிக்கும்TamilSupporting role
2012ThuppakkiTamilDubbing (Vidyut Jammwal)
2013Endrendrum PunnagaiTamilCharacter role
2014வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்TamilSupporting role
2014AnjaanTamilDubbing (Vidyut Jammwal)
2025Game of LoansTamilFinal film appearance

தனுஷின் அறிமுகப்படமான `துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிநய். பிறகு `ஜங்க்ஷன்’, `சக்ஸஸ்’, `தாஸ்’, `பாலைவன சோலை’, `ஆறுமுகம்’, `ஆரோகணம்’, `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனப் பல தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஃபஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமான படமான `கையெத்தும் தூரத்து’ உட்பட சில படங்களில் நடித்தார்.

மலையாளத்தில் பழம்பெரும் நடிகை டி ஆர் ராதாமணி. பல படங்களில் நடித்தவர், `வன்மம்’, `மன்னர் வகையறா’ போன்ற தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அபிநய் இவரது மகன் தான் . துவக்கத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சினிமா வாய்ப்புகள்  ஒருகட்டத்தில் குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு சில வருடங்கள் துபாய் சென்று வேலை பார்த்தவர், மீண்டும் சினிமாவுக்கு வந்து `சிங்கார சென்னை’ என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் அது பெரிய அளவில் கை கொடுக்காததால் விளம்பரப் படங்களில் நடிக்க துவங்கினார் அபிநய். மேலும் சூர்யா நடித்த `அஞ்சான்’ , விஜய் நடித்த `துப்பாக்கி’ போன்ற படங்களில் வித்யுத் ஜம்வால், `பையா’ படத்தில் மிலிந் சோமன் போன்றோருக்கு தமிழில் டப்பிங் பேசியது அபிநய் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »