மின்சார வாரிய தலைமை அலுவலக Hard Disk திருட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?

மின்சார வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? விரிவான விசாரணைக்கு அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் உத்தரவு

image 40

சென்னை,ஜூன் 4: சென்னை June 4: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TNEB) சென்னை தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கணினிகளின் ஹார்ட் டிஸ்கள் (Hard Disks) திருடப்பட்ட விவகாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால முக்கிய டெண்டர்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான அனைத்து ரகசியத் தரவுகளையும் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் ‘பேக்கப்’ (Backup) எடுக்கத் துறை ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் இந்த விவகாரத்தில் உள்கட்டமைப்பு சார்ந்த சவால்கள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Also read : தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு

விஜிலன்ஸ் விசாரணையைத் தொடர்ந்து போலீஸ் ஆக்ஷன்

மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்கள் காணாமல் போனது குறித்துப் பேசிய அமைச்சர் “கடந்த மாதமே இது தொடர்பாகத் துறை ரீதியான தகவல்கள் பெறப்பட்டன.முதற்கட்டமாக மின்சார வாரியத்தின் விஜிலன்ஸ் (Vigilance) பிரிவு அதிகாரிகள் இது குறித்து அலுவல் ரீதியான விசாரணையை மேற்கொண்டனர்.அதன் பின்னரே அதிகாரப்பூர்வமாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே சில நபர்களைக் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் (Secure) கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன,” என்றார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “விசாரணை தற்பொழுது அதிதீவிரமாக நடந்து வருவதால் எந்தெந்தத் துறைகளின் ஹார்ட் டிஸ்கள் எத்தனை எண்ணிக்கையில் திருடப்பட்டன என்ற விவரங்களை இப்போது வெளியிடுவது பொருத்தமாக இருக்காது.ஆனால் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் யாரும் மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஹார்ட் டிஸ்க்குகளைத் திருட முடியாது.யாருடைய தூண்டுதலின் பேரில் எந்த நோக்கத்தில் என்ன மாதிரியான தரவுகளைத் திருடுவதற்காக இந்தச் சதி அரங்கேறியுள்ளது என்பது முழுமையான விசாரணைக்குப் பிறகு காவல்துறை அறிக்கையின் மூலம் வெளிவரும்,” என்று தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகால ரகசியத் தரவுகள் ‘பேக்கப்’ செய்ய உத்தரவு

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களையும் பாதுகாக்கவும் கணினிகளில் உள்ள தரவுகளைப் பாதுகாப்பாகப் பேக்கப் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட:

  • அனைத்து முக்கிய டெண்டர்கள் (Tenders) மற்றும் கொள்முதல் சார்ந்த ஆவணங்கள்
  • ஒப்பந்தத் தொழிலாளர்கள் (Contract Employees) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் சார்ந்த விவரங்கள்
  • நிலக்கரி கொள்முதல் (Coal Purchase) தொடர்பான தரவுகள்
  • சோலார் (Solar) மற்றும் பசுமை ஆற்றல் (Green Energy) திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அதன் பின்னணியில் உள்ள நிறுவனங்களின் விவரங்கள்

ஆகிய அனைத்துச் சென்சிடிவ் தரவுகளும் (Sensitive Data) தற்போது அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பேக்கப் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் தரவுகளை முழுமையாக அழித்துவிட்டுத் தப்பிக்க நினைப்பவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த கால ஊழல் பின்னணி குறித்துச் சந்தேகம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்சிக் காலத்தில் நிலவிய மின்மாற்றி (Transformer Oil) கொள்முதல் முறைகேடுகள் தொடர்பான வழக்கு ஏற்கனவே சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாகக் கடந்த மாதம் சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டனர்.இந்தச் சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப் பிறகுதான் பழிவாங்கும் நோக்கிலோ அல்லது தங்களின் முறைகேட்டுத் தரவுகளை அழிக்கும் நோக்கிலோ இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்குத் தீவிரமாகப் பதிலளித்த அவர் “அரசாங்கத்தையோ அல்லது அரசு நிறுவனங்களையோ எந்தவொரு தனிநபரும் மிரட்டிப் பார்க்க முடியாது.தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும்” என எச்சரித்தார்.

மின்கட்டணப் புகார்கள் மற்றும் உள்கட்டமைப்புச் சவால்கள்

மின்கட்டணம் உயருவதாகப் பொதுமக்கள் மத்தியில் எழும் புகார்கள் குறித்துப் பேசிய அமைச்சர் “மின்சார மீட்டரில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதில் திடீர் மாற்றங்கள் வர வாய்ப்பில்லை.இருப்பினும் குறிப்பிட்ட புகார்கள் ஏதேனும் இருந்தால் நுகர்வோர் அதனைத் தெரிவித்தால் கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும்,” என்றார்.

தமிழகத்தின் தற்போதைய மின்தடைப் பிரச்சினைகளுக்கான தொழில்நுட்பக் காரணங்களையும் அவர் விளக்கினார்:

  • துணை மின்நிலையங்களின் பற்றாக்குறை: தற்போதைய மின் நுகர்வு மற்றும் இரவு நேர உச்சப் பயன்பாட்டு (Peak Hours) லோடுகளைக் கையாளுவதற்கு மாநிலத்திற்கு உடனடியாக 250 புதிய துணை மின்நிலையங்கள் (Substations) தேவைப்படுகின்றன.மதுரையில் 6 துணை மின்நிலையங்கள் உட்பட சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு பாதியில் நின்ற பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
  • பழைய மின்மாற்றிகள்: 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்ஃபார்மர்களால் முழுத் திறனுடன் (Full Efficiency) இயங்க முடிவதில்லை.அவற்றை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
  • பூமிக்கடி கேபிள் பழுதுகள்: 110 கேவி (110 KV) கேபிள்கள் சேதமடைந்தால் அதனைச் சரிசெய்ய இரண்டு நாட்கள் வரை ஆகிறது.இத்தகைய சூழல்களில் மாற்றுப் பாதைகள் வழியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • காற்றாலை மின்சாரச் சரிவு: கடந்த சில நாட்களாகக் காற்றாலை (Windmill) மூலமாகக் கிடைக்க வேண்டிய மின்சாரம் திடீரெனக் குறைந்ததே தற்காலிக மின் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம்.

இரவு நேர மின்தடையும் நடமாடும் குழுக்களும்

சென்னை மதுரவாயல் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்துப் பேசிய அமைச்சர் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்ய மின்சார வாரியம் சார்பில் மொபைல் டீம்கள் (Mobile Teams) அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.இக்குழுக்களின் செயல்பாட்டால் பழுது சரிசெய்யப்படும் நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது.தற்போது இந்த நடமாடும் குழுக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்த்தப்பட்டு வருகிறது.

புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கோடைகாலத் தேவைகளைச் சமாளிக்கவும் உள்கட்டமைப்பைச் சீரமைக்கவும் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும்Parallel-ஆகப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் நிறைவாகத் தெரிவித்தார்.து பேட்டியில் குறிப்பிட்டார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »