கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமி இருவரும் பழகியதாக கூறப்படுகிறது தெரிகிறது . இதற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய் பழகியதாக கூறப்படும் பெண்ணின் தந்தை குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் சஞ்சய் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே அவர்கள் சஞ்சையை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் சில இடங்களில் சஞ்சய்க்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் ரத்த காயங்களுடனும், கீழே விழுந்துள்ளார் உடன் வந்த அவரது நண்பர்கள் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் விடாமல் துரத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கத்தி பட்டு மாரிமுத்துவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து கத்திக்குத்தில் காயம் அடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்து இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக சஞ்சய் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
காதல் விவகாரத்தில் காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 2: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதற்கான காரணங்களையும், ஆளும் திமுக அரசு மீது தனக்கு இருந்த ஒட்டுமொத்த குமுறல்களையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில், திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடியவர், தமிழகத்தின் அடுத்ததும் முதலமைச்சராக விஜய்தான் வருவார் என்றும் அதிரடியாகக் கணித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சரின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா… Read more: “திமுக தலைவருக்காக 25 முறை சிறை சென்றேன்… ஆனால் குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – வைகோ பரபரப்பு பேச்சு
சென்னை , ஜூலை 1: முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது அதிகாரப்பூர்வ கூட்டணி கட்சிகளின் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது நூற்றி எட்டு தொகுதிகளில் கிரிப் எடுத்து வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருந்தாலும் கூட வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மற்றும் கூட்டணியில் நீடிக்கும் கட்சிகளிடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. சில நேரங்களில்… Read more: கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் விஜய் நேரடி ஆலோசனை! கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?யார் யார் பங்கேற்பு?
சென்னை , ஜூலை 1 : தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் வியூகங்களை நோக்கி மிக வேகமாக நகரத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவங்களும் இணைந்து ‘பொது வேட்பாளர்’ என்ற புதிய உத்தியைக் கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் வலுவான தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராகக் களம்… Read more: திமுக அதிமுக பொது வேட்பாளர் வியூகம்: தமிழக இடைத்தேர்தல் களத்தில் தவெக போடும் புதிய கணக்கு
சென்னை, ஜூலை 1: தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சி அமைப்பதற்காகத் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் திமுகவின் இத்தகைய குதிரை பேர முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை காவல்துறை தற்போது மூன்று பேரைக் கைது செய்திருப்பதாகத்… Read more: TVK ஆட்சியை கவிழ்க்க கோடிகளில் பேரம்- சென்னை 3 பேர் கைது பின்னணி ; திமுக, அதிமுக மீது அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments