
‘Chennai , May 11 : Jananayagan’ ரிலீஸ் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் ‘Jananayagan’ திரைப்பட தாமதம், சென்சார் சர்ச்சை மற்றும் அரசியல் பின்னணி குறித்து தயாரிப்பாளர் Venkat K Narayana முக்கிய தகவல்கள் பகிர்ந்துள்ளார்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றதையடுத்து, அவரது கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘Jananayagan’ மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக படத்தின் ரிலீஸ் தாமதம், சென்சார் பிரச்சனை மற்றும் அரசியல் அழுத்தம் இருந்ததா என்ற கேள்விகள் மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இந்த நிலையில், ‘Jananayagan’ படத்தின் தயாரிப்பாளரான Venkat K Narayana அளித்த பேட்டி தற்போது தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயின் பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சி பொங்கிய தயாரிப்பாளர்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற தருணத்தை “வரலாற்று தருணம்” என Venkat K Narayana விவரித்தார். “ரீல் ஹீரோவாக இருந்தவர் ரியல் லைஃப் ஹீரோவாக மாறியிருக்கிறார்” என்று அவர் கூறினார் . முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய மக்கள் ஆதரவைப் பெற்றது சாதாரண அரசியல் வெற்றியல்ல என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் விஜயை ஒரு மாற்றத்தின் குரலாக பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், ‘Jananayagan’ என்ற தலைப்புக்கு உண்மையான அர்த்தம் தற்போது கிடைத்துவிட்டது என்றும், “தமிழகத்தின் ஜனநாயக நாயகனாக விஜய் மாறியுள்ளார்” என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
‘Jananayagan’ சென்சார் தாமதம் அரசியல் காரணமா? : திரைப்பட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விஷயம் ‘Jananayagan’ எப்போது வெளியாகும் என்பதுதான். முதலில் ஜனவரியில் வெளியாக திட்டமிடப்பட்ட இந்த படம், சென்சார் பிரச்சனைகளால் தாமதமானது.
இதுகுறித்து Venkat K Narayana கூறுகையில், “நாங்கள் டிசம்பரிலேயே சென்சாருக்கு விண்ணப்பித்தோம். ஆரம்பத்தில் UA 6+ கிளியரன்ஸ் கிடைத்தது. ஆனால் பின்னர் ஒரு குழு உறுப்பினரின் எதிர்ப்பால் படம் Revision Committee-க்கு அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தார். அவர் நேரடியாக அரசியல் அழுத்தம் இருந்தது என்று கூறவில்லை. ஆனால், “ஜனவரி முதல் இன்றுவரை நடந்த விஷயங்களில் நான் ஆழமாக செல்ல விரும்பவில்லை” என்ற அவரது பதில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
தற்போது Revision Committee படத்தை பார்த்துவிட்டதாகவும், விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அவரின் ரசிகராக இருப்பார் என்று தயாரிப்பாளர் கூறியிருப்பது முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. “அவரை அண்ணன் போல பார்க்கிறார்கள், மகன் போல பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் அவருடன் உணர்ச்சி ரீதியாக இணைந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
அதனால் தான், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் விஜய் படங்கள் Box Office-ல் வெற்றி பெறுகின்றன என்றும், மக்கள் திரையரங்கிற்கு வந்து அவரை கொண்டாடவே விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
சமூக வலைதள அரசியலில் விஜய் அமைத்த புதிய முறை : விஜயின் அரசியல் வெற்றியில் சமூக வலைதளங்களின் பங்கு மிகப்பெரியது எனவும் Venkat K Narayana கூறியுள்ளார். குறிப்பாக Instagram மற்றும் digital campaign மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்களை எளிதில் சென்றடைந்ததாக அவர் தெரிவித்தார். அவரது fan clubs “virtual warriors” போல செயல்பட்டதாகவும், அந்த டிஜிட்டல் ஆதரவு நேரடியாக வாக்குகளாக மாறியது என்றும் அவர் கூறியிருப்பது அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல நடிகர்கள் கூட்டத்தை ஈர்த்தாலும், அதை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. ஆனால் விஜயின் conversion ratio மிகவும் அதிகமாக இருந்தது என்ற அவரது கருத்து தற்போது அரசியல் உலகில் அதிகம் பேசப்படுகிறது.
விஜயின் அடுத்த சவால் நிர்வாகம் என தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். “அரசியல் வேறு, நிர்வாகம் வேறு” என்றாலும், விஜயின் ஒழுக்கம், கவனம் மற்றும் மக்களுடன் இணையும் தன்மை அவரை சிறந்த நிர்வாகியாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காலை 7 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வருவது, 7.30 மணி முதல் ஷாட்டை கொடுப்பது போன்ற விஷயங்கள் விஜயின் ஒழுக்கத்தை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், “அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான vision உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.








