உன்னை நினைக்காத நாள் இல்லை… மறைந்த மோனலுக்கு சிம்ரன் செலுத்திய உருக்கமான அஞ்சலி!

Actress Monal’s Memorial Day: "Not a Day Goes Without Thinking of You" -  Simran’s Emotional Tribute Moves Fans
Actress Monal’s Memorial Day: “Not a Day Goes Without Thinking of You” – Simran’s Emotional Tribute Moves Fans

சினிமா அப்டேட்   ,ஏப்ரல் 15:  தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக வலம் வந்து ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகை மோனலின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மோனல் மிக விரைவாகவே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் திரையுலகில் பெரிய உயரங்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சென்னை தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே. இந்த எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது. அவரது மரணம் குறித்துப் பல்வேறு தரூகளில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Also Read : தனுஷின் D56 படத்தில் சாரா அர்ஜுன்? கோலிவுட்டில் வெடித்த புதிய விவாதம்!

அவர் மறைந்து இருபது ஆண்டுகளைக் கடந்தும் அவரது நினைவுகள் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் அவரது குடும்பத்தினரிடமிருந்தும் மறையவில்லை என்பதை சிம்ரனின் தற்போதைய பதிவு உணர்த்துகிறது. தனது தங்கையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சிம்ரன் அதில் உன்னை நினைக்காத நாள் இல்லை என்றும் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் மோனு என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அக்கா மற்றும் தங்கை இடையேயான பாசப் பிணைப்பையும் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பின் நீண்ட கால வலியையும் இந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

இதனைப் பார்த்த திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சிம்ரனுக்கு தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘பத்ரி’ ‘சமுத்திரம்’ ‘சார்லி சாப்ளின்’ போன்ற திரைப்படங்களின் மூலம் மோனல் என்றும் தங்களது நினைவுகளில் வாழ்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கலைஞரின் வாழ்வு குறுகியதாக இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற கலைப் படைப்புகள் அவரை என்றும் அழியாமல் வைத்திருக்கும் என்பதற்கு மோனலின் மீதான ரசிகர்களின் இந்த அன்பு சான்றாக உள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *