நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக இந்த முறைகேட்டில் தொடர்புடைய 11 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல்களில் அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் முறைப்படி புகார் அளித்த புகார்தாரர் தரப்பில் கூறுகையில்,
“குறிப்பிட்ட அந்த ஆறு ஆண்டு காலத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதலில் எவ்வித விதிகளும் பின்பற்றப்படவில்லை. தங்களுக்குச் சாதகமான இடங்களைப் பெறுவதற்காக, பெரும் தொகையைக் லஞ்சமாகக் கொடுத்து இடமாறுதல்கள் பெறப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனது புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விரிவான முதற்கட்ட விசாரணை நடத்தி முறைகேட்டில் நேரடியாகத் தொடர்புடைய 11 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தற்போது முதற்கட்டத் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்” என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்துகுமார், கல்வித்துறையில் நிலவும் இந்த அவலநிலை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் என்பது ஒரு தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இது தங்களது கடமையை நேர்மையாகச் செய்ய நினைக்கும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். கடந்த கால ஆட்சிக் காலங்களிலும் கூட தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்குப் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இடைத்தரகர்கள் மூலம் ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இந்த லஞ்சப் பெருச்சாளிகளின் முறைகேடுகள் உடனடியாக முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். வரக்கூடிய புதிய ஆட்சிக் காலத்திலாவது இதுபோன்ற அநீதிகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது, திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) முன்னிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அதிரடிச் சோதனைகளையும், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2009 முதல் 2015 வரை வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகள் அதற்குப் பயன்படுத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்கள் மற்றும் சர்வீஸ் கோப்புகள் (Service Registers) உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
அரசாங்க விதிகளுக்குப் புறம்பாக, முறையற்ற வழிகளில் பணி மாறுதல் உத்தரவுகளைப் பிறப்பித்த உயர் அதிகாரிகள் யார் யார், அதற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில், முறைகேட்டில் தொடர்புடைய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முறையற்ற வழியில் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது கடுமையான சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம்… Read more: ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்
வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments