Ramanathapuram , May 13 : 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவண பத்திரப்பதிவு ! சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் மீது தம்பதியர் ஆவணங்களுடன் பகீர் குற்றச்சாட்டு…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேல கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி பூர்வீக சொத்து ரூ 40 லட்சம் மதிப்பிலான 20 ஏக்க நிலத்தின் சொத்தை ஆள் மாறாட்டம் செய்து சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கீழ செல்வனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிராமணன்குளம் பகுதியில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலியாக பத்திர பதிவு செய்துள்ளதாக நிலத்தின் உரிமையாளர் பார்வதி தனது கணவருடன் தங்களின் ஆவணங்களுடன் பத்திரப்பதிவு அலுவலர் மீது பகிர் குற்றச்சாட்டு புகார் தெரிவித்துள்ளார்
இது குறித்து பார்வதி அவரது கணவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.. தங்களின் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான பூர்வீக சொத்தை சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் (பொறுப்பு) வேலாயுதம், தங்களது உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உண்மைக்கு புறம்பாக அதிக அளவு தொகை பணத்தை பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக தங்களின் நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து அபகரித்துள்ளதாக தம்பதியர் தெரிவித்தனர்.
இது குறித்து பத்திரப்பதிவு அலுவலர் வேலாயுத்திடம் கேட்ட போது பத்திரப்பதிவின்போது பிரச்சனைகள் சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அதற்கான பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சாயல்குடி பத்திரப்பதிவின் அலுவலர் வேலாயுதம் தெரிவித்தார்
சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம்… Read more: ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்
வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
சென்னை , ஜூன் 13 : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்தடை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கான காரணங்கள் குறித்தும் அதனை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரப்பூர்வ விளக்கங்களை… Read more: தமிழகத்தில் மின்தடைக்கு ஓவர்லோடு மற்றும் நிலத்தடி கேபிள்கள் சேதமே காரணம்: மின்வாரியம் விளக்கம்
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை செப்பறை அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும்… Read more: செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக… Read more: நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
நெல்லை , ஜூன் 13 : நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு மிரட்டல் விடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்… Read more: மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்
நெல்லை , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டித் திருக்கோயில் வளாகத்தைப் பொலிவூட்டும் பணிகளும் தேர்களைப் பராமரிக்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்காகச் சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய ஐந்து தேர்களும்… Read more: ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments