விஜய்க்கு குவியும் ஆதரவு.. 120 எம்எல்ஏக்கள் பலம் உறுதி! TVK ஆட்சிக்கு VCK, CPM, CPI, IUML ஆதரவு என பரபரப்பு

image 175

சென்னை , மே 9 : TVK விஜய்க்கு VCK, CPI, CPM, IUML உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, TVK தலைவர் Vijay தலைமையிலான அணிக்கு பெரும்பான்மை கிடைத்ததாக வெளியாகிய தகவல்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக VCK, CPI, CPM மற்றும் IUML உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுவது, தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளை உருவாக்கியுள்ளது.

118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது 120 எம்எல்ஏக்கள் ஆதரவு TVK அணிக்கு கிடைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் “விஜய் முதல்வராகிறாரா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்கிலும் தீவிரமாக பேசப்படுகிறது.

Also Read : விஜயை தடுக்க அதிமுக ஆட்சிக்கு ஸ்டாலின் ரகசிய ஆதரவு திட்டமா? “அதிமுகவுக்கு சப்போர்ட் கொடுங்கள் என கேட்டார்” – பகீர் தகவலை உடைத்த மார்க்சிஸ்ட் பேபி!

முதலில் VCK தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து IUML-வும் TVK அணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பே CPI மற்றும் CPM உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் TVK அணியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ள நிலையில் . TVK தரப்பில் மொத்த ஆதரவு எண்ணிக்கை 107-இல் இருந்து 120 ஆக உயர்ந்துள்ளதது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கடந்துவிட்டதால், ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக TVK ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் புதிய தலைமுறை மாற்றத்தை எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மத்தியில் இந்த தகவல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக “முதல்வராகிறார் விஜய்” என்ற வாசகம் X, YouTube, Facebook உள்ளிட்ட தளங்களில் வேகமாக டிரெண்டாகி வருகிறது.

அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பு, யார் யாருடன் இணையப் போகிறார்கள் என்ற கேள்வி, பெரும்பான்மை எவ்வாறு உருவாகும் என்ற கணக்கீடு ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக தீவிரமாக பேசப்பட்டு வந்தன. அந்த சூழலிலேயே VCK மற்றும் IUML ஆதரவு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்கா?

TVK அணியுடன் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன என்ற தகவல் வெளியாகியிருப்பது, எதிர்கால கூட்டணி அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுவரை சினிமா மற்றும் மக்கள் செல்வாக்கை அரசியல் பலமாக மாற்ற முயன்ற Vijay, தற்போது கூட்டணி அரசியலிலும் முக்கிய பங்காளியாக மாறியிருக்கிறார் என்ற பார்வையும் உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், இந்த ஆதரவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தெளிவான நிலைப்பாடுகள் வெளியாகுமா என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் TVK அலை

“TVK Majority”, “CM Vijay”, “Tamil Nadu Politics”, “Vijay CM” போன்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *