விஜயை தடுக்க அதிமுக ஆட்சிக்கு ஸ்டாலின் ரகசிய ஆதரவு திட்டமா? “அதிமுகவுக்கு சப்போர்ட் கொடுங்கள் என கேட்டார்” – பகீர் தகவலை உடைத்த மார்க்சிஸ்ட் பேபி!

image 174

Chennai , May 9 : விஜயை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர ஸ்டாலின் கேட்டதாக மார்க்சிஸ்ட் தலைவர் எம்.ஏ பேபி பரபரப்பு குற்றச்சாட்டு.

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான கூட்டணி நகர்வுகள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் M. A. Baby வெளியிட்டுள்ள தகவல் புதிய அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக நடிகர் Vijay தலைமையிலான தவெகஆட்சி அமைப்பதை தடுக்கவே, அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும்படி M. K. Stalin கேட்டதாக அவர் கூறியிருப்பது தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.

Also Read : விசிகவுக்கு பதவி நோக்கமல்ல- “தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் வருவார்” – திருமாவளவன் முடிவால் அதிரும் அரசியல் களம்

மார்க்சிஸ்ட் கட்சி விளக்கம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய எம்.ஏ பேபி, திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்த காங்கிரஸ் எந்த முன்னறிவிப்பும் இன்றி வெளியேறியது குறித்து குறிப்பிட்டார். ஆனால், அதுபோன்ற நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் அரசியல் நிலைமை மற்றும் மக்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த தவெகவுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக திமுக தலைமையிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த யோசனையை ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும், அதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கட்டும், அதற்கு வெளியிலிருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு அளிக்கலாம் என முன்மொழிந்ததாகவும் பேபி கூறினார்.

அதிமுக தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், அந்த அணிக்கு எந்த சூழலிலும் ஆதரவு அளிக்க முடியாது என தாங்கள் நேரடியாக தெரிவித்ததாகவும் எம்.ஏ பேபி கூறினார்.

மேலும், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோதும் இதே விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட பேபி, “கொள்ளைப்புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சி நடந்தது” என கூறினார். ஆனால் அப்போது திமுக அல்லது ஸ்டாலின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.

தமிழகத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லாத அரசியல் சூழல் உருவானால், கூட்டணி மற்றும் வெளியாதரவு அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிகிறது. தற்போது மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இந்த தகவல், எதிர்காலத்தில் திமுக, அதிமுக,தவெக மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறவுகளை புதிய கோணத்தில் பார்க்க வைத்துள்ளது.

அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *