திருநெல்வேலி, May 30: தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு தங்கியிருந்து தந்தையின் உடல்நிலையைக் கவனித்து வரும் அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையின் உடல்நிலை குறித்துப் பேசிய அமைச்சர் மதன்ராஜா, இங்குள்ள அரசு மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் மிகவும் அர்ப்பணிப்புடன், சர்வதேச தரத்திற்கு இணையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு தனக்கு முழு திருப்தியை அளித்துள்ளதாகக் கூறிய அவர், தற்போதைய அரசு மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி அரசு மருத்துவமனைகளை நாடி தரமான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தந்தையின் மருத்துவ கவனிப்பிற்கு இடையே, திருநெல்வேலி மாவட்ட சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி குறித்து அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் மதன்ராஜா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அவர் இத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நெல்லை மாவட்டத்தில் அதிகாரிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் முதலாவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு சூழல்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்துப் பேசிய அமைச்சர், படித்த இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளையும், அவர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான சாதகமான சூழலையும் உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திலும், குறிப்பாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்வதற்கான முறையான திட்டங்கள் விரைந்து வகுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விவரித்த அவர், முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அரசின் அனைத்துத் துறைப் பணிகளும் குதிரை வேகத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார். அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அதே வேகத்துடன் மக்களுக்கான பணிகளைப் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய நேரடி ஆய்வுகளும் ஆலோசனைகளும் தடையின்றி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாகச் சிறு, குறு தொழில்கள் சந்தித்து வரும் பல்வேறு நடைமுறைப் பாதிப்புகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், அடுத்தடுத்து முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக உள்ளதால், இந்த விவகாரம் குறித்துப் பின்னர் விரிவாகப் பதிலளிப்பதாகக் நிறைவு செய்தார்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments