திருநெல்வேலி , May 29: நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோடை விடுமுறை மற்றும் பருவமழை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக விளங்குகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மணிமுத்தாறு அணைப் பூங்கா சாலை, கடந்த பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி, முற்றிலும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மேடும் பள்ளமுமாக உருக்குலைந்து காணப்படுகிறது. அரசு வாகனங்கள், மணிமுத்தாறு பட்டாலியன் காவலர்களின் வாகனங்கள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் தினசரி வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எனப் பல தரப்பினரும் இந்தச் சேதமடைந்த தார்ச்சாலையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த தொடர் கோரிக்கைகளை அடுத்து, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் சித்தார்த் சிவா இந்தச் சாலையைச் சீரமைப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், இச்சாலை பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது என்பதால், தற்போதைய சூழலில் சாலையை மேம்படுத்த தப்பால் போதிய நிதி இல்லை என்று கூறி பொதுப்பணித் துறை அதிகாரிகள் கையை விரித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகமே தனது சொந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு இச்சாலையைச் சீரமைக்கத் துணிந்தது. இதற்காக பொதுப்பணித் துறையிடமிருந்து முறையான தடையின்மைச் சான்றும் (NOC) பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மணிமுத்தாறு பேரூராட்சியின் பொதுநிதியிலிருந்து 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக, பேரூராட்சிகளின் இயக்குனரகத்திடமிருந்து தேவையான நிர்வாக அனுமதியும் முறைப்படி பெறப்பட்டது.
நிதியும் ஒதுக்கப்பட்டு, நிர்வாக அனுமதியும் கிடைத்த நிலையில், அடுத்தகட்டமாகப் பணிகளைத் தொடங்குவதற்கான தொழில்நுட்ப அனுமதி (Technical Sanction) கோரி பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள பேரூராட்சிகளின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்தார். இயக்குனரகத்தின் தலைமைப் பொறியாளருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு தற்பொழுது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இன்று வரை அதற்கான தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படாமல் இந்தச் சாலை மேம்பாட்டுத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு, நிதி ஆதாரங்கள் முழுமையாகத் தயார் செய்யப்பட்ட நிலையிலும், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளின் இத்தகைய தாமதத்தால் பூங்கா சாலைச் சீரமைப்புப் பணிகள் முற்றிலும் தொய்வடைந்துள்ளன. இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேரூராட்சிகளின் இயக்குனரகம் உடனடியாகத் தொழில்நுட்ப அனுமதியை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவரும் வழக்கறிஞருமான சித்தார்த் சிவா, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குத் தற்பொழுது விரிவான கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அகமதாபாத், ஜூன் 1: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 19-ஆவது ஐபிஎல் (IPL) தொடர், இரண்டு மாத கால விறுவிறுப்பானப் போட்டிகளுக்குப் பிறகு இன்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இதில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி;… Read more: சொதப்பிய குஜராத்… சிங்கம் போல சீறிய RCB!!! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாபெரும் வெற்றி
சென்னை, மே 31 : ஜூன் 1, 2026 முதல் பல தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய விதிகள் & கட்டண மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.வங்கிச் சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் & தமிழக அரசு நிர்வாகம் சார்ந்த முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு: வங்கி டெபாசிட் & சொத்து பரிவர்த்தனை விதிகளில் மாற்றம் : வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த விதிகளில் பொதுமக்களுக்குச் சாதகமான சில முக்கிய… Read more: ஜூன் 1 முதல் ATM கட்டணம், UPI பெயர்கள் & சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள்!!!
கோவை , மே 31: டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்றுடன் சுமுகமாக நிறைவடைந்தன. கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த முன்னணி அணிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தின. ஆண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும் என மொத்தம் 18 பலத்த அணிகள் இந்தத் தொடரில்… Read more: கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு; இந்திய இராணுவம், தென் மத்திய ரயில்வே சாம்பியன்
அகமதாபாத் , May 31: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்புடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம்… Read more: ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபியின் துல்லிய பந்துவீச்சு; 155 ரன்களில் சுருண்டது குஜராத்!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, தற்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read more: கோவையில் பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’… கட்டுமான வேகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments