தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும், அரசியல் நோக்கர்களின் கணிப்புகளைத் தலைகீழாக மாற்றும் வகையிலும் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகமும் (தவிக) தலா 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று சமபலத்துடன் மல்லுக்கட்டி வருகின்றன.
மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுக 16 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய முக்கோணப் போட்டி தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் பிரதிபலிப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் தற்போதைய வாக்கு எண்ணிக் கை நிலவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே பின்தங்கி தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசு 14,992 வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 11,587 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
திருச்சியில் விஜய் முன்னிலை : விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடக்கம் முதலே தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி அவர் 9,438 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். எனினும், அவருக்குக் கடும் சவாலாகத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் 9,377 வாக்குகளுடன் மிக மிக நெருக்கமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால் இங்கு எந்த நேரத்திலும் மாற்றம் நிகழலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.
மறுபுறம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திரும்பியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் களம் காணலிலேயே தொடர்ந்து முன்னிலை பெற்று அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேப்பாக்கத்தில் உதயநிதிக்குச் சறுக்கல் – விஐபி தொகுதிகளின் தற்போதைய நிலை
திமுகவின் மிக முக்கியமான கோட்டையாகவும், நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே பின்னடைவைச் சந்தித்து வருவது ஆளுங்கட்சித் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றப் பகுதியில் பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளார். போடிநாயக்கனூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகளை மீட்டு தற்போது முன்னிலைக்கு வந்துள்ளார்.
தலைநகர் சென்னையின் நிலவரப்படி, துறைமுகம் தொகுதியில் தவிக வேட்பாளர் சினோரா அசோக் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பின்னடைவைச் சந்தித்துள்ள அதே வேளையில், திமுகவின் முக்கிய முகமான அமைச்சர் சேகர்பாபு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது சென்னை அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், பல தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் சில நூறு வாக்குகளின் வித்தியாசத்திலேயே மாறி மாறி வருவதாலும், இறுதி முடிவுகள் வெளியாகும் போதுதான் தமிழகத்தின் அடுத்த ஆட்சி அதிகாரம் யார் கையில் என்பது முழுமையாகத் தெரியவரும்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments