சென்னை ,ஜூன் 14 : சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் ,நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,தற்போதைய சூழ்நிலைகள் தன்னை அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாக அவர் தெரிவித்தார். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி ,மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற தூய நோக்கத்தில் மட்டுமே இந்த முடிவை நோக்கி நகர்வதாக அவர் விளக்கம் அளித்தார். பொதுமக்களின் ஆலோசனைகளையும் ,ஆதரவையும் பெற்று ,விரைவில் தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாகக் குறிப்பிட்ட அவர் ,இது தொடர்பாக ரசிகர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

தனது இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ் ,தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் மற்றும் அது தொடர்பான முக்கிய தகவல்களை மிக விரைவில் ரசிகர்களுக்குத் தெரிவிக்க உள்ளதாகக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.
also : மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ,தமிழக வெற்றி கழகத்தின் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டினார். குறிப்பாக ,மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதையும் ,பள்ளிக்கல்வித்துறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தனது இந்த அரசியல் நகர்வு ,அதிகாரத்தை நோக்கியது அல்ல என்றும் ,நீண்டகாலமாகத் தான் செய்து வரும் சமூகப் பணிகளை மேலும் பரந்த அளவில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முயற்சியே என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ரசிகர்களின் முழுமையான ஆதரவுடனும் ,ஆலோசனையுடனும் மட்டுமே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.








