புதுச்சேரி கோட்டகுப்பம் அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியை சார்ந்த ஸ்டாலின், கார்த்திக், சிலம்பரசன் ஆகிய மூவர் கார்த்திக் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரி உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது தமிழக பகுதியான கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது முன்னாள் அதிவேகமாக வந்த அரசு சொகுசு பேருந்து ஒரு காரின் பின்புறம் மோதி பிறகு காருக்கு முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் பைக்கில் சென்ற மூவரும் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று பேருந்துக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். இதில் பைக்கில் சென்ற மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து வந்த கோட்டுக்குப்பம் போலீசார் மூவரின் உடல்களை கைப்பற்றி அருகிலுள்ள பீம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.








