நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , டெல்லியிலிருந்து வினாத்தாள்கள் விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட உள்ளன. அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு அதிவிரைவாகவும், கசிவு போன்ற எவ்வித அச்சுறுத்தல்களுமின்றியும் வினாத்தாள்களைக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள்களைப் பாதுகாப்பாக ஏற்றி வருவது போன்ற ஒரு பிரம்மாண்ட பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில் எழுந்த வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ,இந்த முறை எவ்வித முறைகேடுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய ,மாநில அரசுகளும் காவல்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ,இந்த அதிவிரைவு பாதுகாப்பு ஒத்திகை நெல்லையில் அரங்கேறியுள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய தேர்வு முகமை (NTA) மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததால் ,நாடு தழுவிய அளவில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 மணி முதல் மாலை 05:15 மணி வரை இந்த மறுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த முறை மாணவர்களின் கூடுதல் வசதிக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு ,மொத்தம் 195 நிமிடங்கள் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காவல்துறையும் தேர்வு முகமையும் மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதன் முக்கியப் பகுதியாக ,தேர்வு நாளன்று மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு மிகக் குறுகிய காலத்தில் ,அதீத பாதுகாப்புடன் வினாத்தாள்களைக் கொண்டு வர புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக ஒத்திகை இன்று காலை நெல்லையில் நடத்தப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களைப் பாதுகாப்பாக ஏற்றி வருவது போல ,இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நெல்லை மாநகரின் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை வந்து இறங்கி தனது ஒத்திகையை நிறைவு செய்தது.
also : எம்.எல்.ஏ.க்களுக்கான இருநாள் புத்தாக்க பயிற்சி: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தேர்வு நாளன்றும் இதே வழிமுறையைப் பின்பற்றி ,மதுரையிலிருந்து வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாகப் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்குப் பிரித்து அனுப்பப்படும் என நெல்லை மாநகர காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் உச்சகட்ட கண்காணிப்பில் இருப்பதை இந்த ஒத்திகை உறுதி செய்துள்ளது.
இன்று காலை நெல்லை மாநகரப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பெரும் சத்தத்துடன் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாகப் பறந்து வந்து ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்களும் ,சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் என்ன ஏதென்று புரியாமல் சற்று வியப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர். நகரின் மையப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் இறங்கியதால் பல்வேறு ஊகங்கள் பரவிய நிலையில் ,பின்னர் இது நீட் தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்கான ஒத்திகை நடவடிக்கைதான் என காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஒத்திகை நடவடிக்கை தற்போது நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கிடையே மறுதேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் (Admit Card) கடந்த ஜூன் 14 அன்று NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (neet.nta.nic.in) வெளியிடப்பட்டுவிட்டன. கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்காக வழங்கப்பட்ட பழைய ஹால் டிக்கெட்டுகளைக் கொண்டு மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதி கிடையாது என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ,மறுதேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக இணையதள முகவரிக்குச் சென்று தங்களின் புதிய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து ,தேர்வு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தவறாமல் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நெல்லை , ஜூன் 16: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுத்தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ,திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான ஒத்திகை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில் எழுந்த வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ,இந்த முறை எவ்வித முறைகேடுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய ,மாநில அரசுகளும் காவல்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ,இந்த அதிவிரைவு பாதுகாப்பு ஒத்திகை நெல்லையில் அரங்கேறியுள்ளது.