IPL 2026 சர்ச்சை: ராஜஸ்தான் ராயல்ஸ் மேனேஜர் மீது BCCI நடவடிக்கை

IPL 2026 Controversy: Rajasthan Royals Manager Faces BCCI Action – Relief for Vaibhav Suryavanshi Fans?
IPL 2026 Controversy: Rajasthan Royals Manager Faces BCCI Action – Relief for Vaibhav Suryavanshi Fans?

டெல்லி , ஏப்ரல் 17: ஐபிஎல் தொடரின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் அடிபடுவதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் இந்த விவகாரம் உற்றுநோக்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் அமரும் டக்அவுட் பகுதியில் அமர்ந்திருந்த மேலாளர் ரோமி பிந்தர், தனது மொபைல் போனைப் பயன்படுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ விதிமுறைகளின்படி, போட்டிகள் நடைபெறும் போது வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் நடமாடும் பகுதிக்குள் மொபைல் போன் உள்ளிட்ட எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களையும் பயன்படுத்த கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also : ஜனநாயகன் படம் லீக் சர்ச்சை – எடிட் ரூமுக்குள் நுழைந்து காட்சி திருட்டா? உதவி எடிட்டர் கைது விவரம் அதிர்ச்சி

போட்டியின் நேர்மையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த விவகாரத்தை பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு மிகவும் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளர் ரோமி பிந்தருக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ‘விளக்கம் கோரும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டக்அவுட் பகுதியில் மொபைல் போன் புழங்கியது எவ்வாறு என்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் தங்களது விரிவான விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தில் ரசிகர்களை அதிகம் கவலைகொள்ளச் செய்தது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இதில் தொடர்புபடுத்தப்பட்டதுதான். தொலைக்காட்சி காட்சிகளின்படி, ரோமி பிந்தர் மொபைல் போனைப் பயன்படுத்திய போது, அவருக்கு மிக அருகிலேயே வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருந்தார். மேலும், மேலாளரின் மொபைல் திரையை சூர்யவன்ஷியும் எட்டிப் பார்த்ததாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பின. எனினும், இந்த விவகாரத்தில் வைபவ் சூர்யவன்ஷி மீது பிசிசிஐ தரப்பிலோஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகி மீது பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *