கடுங்குளிர் குறைந்து, இன்று இரவே மழை பெய்யும் ! எங்கெல்லாம் ? வெதர்மேன் தரும் முக்கிய தகவல்கள்..

image search 1765857038493

டிசம்பர் 16- 2025; நெல்லை : நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக குறையும்.

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று காரணமாக இன்று இரவு தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் தஞ்சை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இன்று இரவு இராமநாதபுரம் கடலோர பகுதிகள் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். மேலும் நெல்லை தென்காசி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் பரவலான மிதமான மழை பெய்யும்.

கனமழையை பொறுத்தவரை தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் இராமேஷ்வரம் ஆகிய கடலோர பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது.

image search 1765857097538

மேலும் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலை கிராமங்களில் மிக கனமழை பெய்யும்.

பாபநாசம் மணிமுத்தாறு அணை நிரம்புமா?

ஈரப்பதமான கிழக்கு திசை காற்று காரணமாக நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாபநாசம் மணிமுத்தாறு அணை இந்த 2 நாட்களில் நிரம்ப வேண்டும். வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைத்தால் அணை நிரம்பும். இல்லையெனில் இந்தாண்டு அணை நிரம்ப சாத்தியமில்லை. காரணம் நாளை மறுநாள் டிசம்பர் 18 க்கு பிறகு வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது என தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

30 மாதங்கள் வாடகை பாக்கி வைத்த அரசின் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் ! ஷட்டர் வெளியே காத்திருக்கும் சார்பதிவாளர்…

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »