திருவாரூர்,May 23 : பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரைத் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், விற்பனையையும் முற்றிலும் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து திருவாரூர் பகுதிக்கு காரில் பெருமளவில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ‘ஆல்ட்ரோஸ்’ (Altroz) கார் ஒன்றை போலீசார் மறித்துச் சோதனை செய்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது கடந்த 2025-ஆம் ஆண்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையில் இருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து, அஸ்ரப் அலியிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தனக்குப் பின்னால் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி ‘டஸ்டர்’ (Duster) கார் ஒன்றில் பெருமளவிலான குட்கா மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து உஷாரான போலீசார், காட்டூர் பகுதியிலேயே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அஸ்ரப் அலி குறிப்பிட்டபடி அந்த வழியாக வந்த டஸ்டர் காரை மடக்கிப் பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த காரின் உள்ளே மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் மங்கனராம் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இந்த குட்கா பொருட்களைத் தமிழகத்திற்குள் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் அஸ்ரப் அலி, ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர குமார், மங்கனராம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 365 கிலோ குட்கா பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் மற்றும் டஸ்டர் ஆகிய 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து இந்த குட்கா பொருட்கள் திருவாரூரில் யாருக்காகக் கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments