நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு, தினமும் காலையில் இருசக்கர வாகனத்தில் ரஸ்தா பகுதிக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் சுப்பிரமணியன் தனது பைக்கில் ரஸ்தா பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தேநீர்க் கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது கிராமத்தை நோக்கிச் சாலையோரமாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராஜ் (52) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்து ரஸ்தா பகுதிக்கு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் அச்சுப் பேரிங் (Axle bearing) திடீரென உடைந்ததது.
பேரிங் உடைந்த அடுத்த சில நொடிகளில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த அரசுப் பேருந்து, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மிக பலத்த வேகத்தில் மோதியது.
பேருந்தின் முன்பகுதி மோதிய வேகத்தில் சுப்பிரமணியன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலின் முக்கியப் பகுதிகளில் மிகக் கடுமையான ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. விபத்தின் தீவிரத்தால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக மானூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், விபத்தில் பலியான சுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல், உடற்கூறாய்வுக்காக (Post-mortem) நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் சேதமடைந்த இருசக்கர வாகனத்தைச் சாலையிலிருந்து அகற்றிய போலீசார், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் ராஜிடம், பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்தும், விபத்து நடந்த விதம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை நேரத்தில் அரசுப் பேருந்தின் பேரிங் உடைந்து, கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் முதியவர் உயிரிழந்த இச்சம்பவம் ரஸ்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்துகளின் முறையான பராமரிப்புப் பணிகளை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments