
குன்றத்தூர் , மே 13 : குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம் பெரியபுராணம் இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சேக்கிழார் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சேக்கிழார் குருபூஜை விழா தொடங்கியது. குருபூஜை விழாவை முன்னிட்டு கற்பக விநாயகர் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வழக்கில் விநாயகரை வைத்து கோவிலின் முக்கிய மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது இதனை தொடர்ந்து இன்று முதல் 21 ஆம் தேதி சேக்கிழாருக்கு மகா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வாழை மழை தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது குருபூஜை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளத.
- ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
- அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை - காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ? - 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. - கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்! - டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு - நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்புநெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
- நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
- நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
- வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படைநெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது… Read more: வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை










