திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

image 265

தஞ்சாவூர் , மே 13 : திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகை திருட்டு !
நடுக்கடை பகுதியில் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்…

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா (57) இவரது மனைவி சகிலா (52) இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வெளியூரில் வசித்து வருகின்றனர். இதயதுல்லா கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் காலை இவரது வீட்டின் கொல்லைப்புற கதவு திறந்து இருப்பது கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவங்கள் வீட்டின் உரிமையாளர் இதயத்துல்லாவிற்கும், திருவையாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Also Read : மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

இதையடுத்து இதயத்துல்லாவின் உறவினர் தஞ்சையை சேர்ந்த ஜாகீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வந்து சேர்ந்தார். மேலும் திருவையாறு போலீஸ் டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் மீனா, சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவஇடததிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து உள்ளே நுழைந்து கீழ் பகுதியில் படுக்கையறையில் இருந்த பீரோ மற்றும் மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த ஆரம், கைச்செயின், நெக்லஸ், செயின், நெத்திச்சூடி, தோடு உள்ளிட்ட 20 பவுன் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் கலை கண்ணகி, மோப்ப நாய் லீயோ வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டி யிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பவுன் நகை திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பும் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
Woman Arrested in Vellore After Posing as DSP Officer to Surprise Boyfriend on His Birthday

வேலூர்  , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக…

Continue Reading
பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
Minister Mari Wilson Prioritizes Road Repair Works in Tirunelveli Ahead of Monsoon Season to Ensure Public Safety and Smooth Transportation

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது…

Continue Reading
செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற…

Continue Reading
நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
Tirunelveli Woman Declared Brain Dead Donates Organs, Laid to Rest with Full State Honors

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Continue Reading
மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்
image 170

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீதும் அவர்களுக்கு…

Continue Reading
ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!
Asia’s Largest Temple Chariot Gets a Grand Makeover at Nellaiappar Temple as Preparations Intensify for the Grand Car Festival

நெல்லை  , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டித் திருக்கோயில் வளாகத்தைப் பொலிவூட்டும் பணிகளும் தேர்களைப் பராமரிக்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

Continue Reading
கள்ளக்குறிச்சி: ரூ.2,500 தகராறில் பெண் கொலை; 50 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு
Kallakurichi Horror: Woman Murdered Over ₹2,500 Dispute, Body Recovered from 50-Foot Deep Ravine

கள்ளக்குறிச்சி  , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாயமாகி 18 நாட்களுக்குப் பிறகு கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து அந்தப் பெண்ணின் சடலத்தைக்…

Continue Reading
சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு!
Sathankulam Custodial Death Case: Former Policemen Face Setback as Court Rejects A-Class Prison Request

மதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…

Continue Reading
திருவண்ணாமலையில் கஞ்சா, கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Tiruvannamalai Launches War Against Ganja and Illicit Liquor, Says Minister Aadhav Arjuna

 திருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.…

Continue Reading
மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

நெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை உடனடியாகத் தொடங்காத பட்சத்தில் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச்…

Continue Reading
Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »