மதுரை , ஏப்ரல் 13: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையிலான வார்த்தை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, “அவரை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வராக ஏற்கமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி கூறிய சில கருத்துகள் தமிழர் உணர்வுகளையும், பெண்களின் மரியாதையையும் புண்படுத்தியதாக குற்றம்சாட்டினார். தமிழர் பண்பாடு மற்றும் பெண்களை மதிக்காதவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
DVAC-க்கு கூடுதல் பொறுப்பு: IG துரை குமார் நியமனம் – ஊழல் விசாரணைகளில் வேகம் அதிகரிக்குமா?
மேலும், தற்போதைய DMK அரசை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், AIADMK தலைமையில், பிரதமர் Narendra Modi ஆதரவுடன் ஒரு “நல்ல அரசு” தமிழகத்தில் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், மதுரை தெற்கு தொகுதியில் BJP வேட்பாளர் ராமா ஸ்ரீநிவாசன் வெற்றி பெறுவார் எனவும் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். அந்த தொகுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இந்த தேர்தல் “மாற்றத்திற்கான தேர்தல்” என்று அவர் கூறினார்.
இந்த தொகுதியில் DMK வேட்பாளர் பூமிநாதன் தனது இருக்கையை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார். BJP மற்றும் AIADMK கூட்டணி இந்த முறை புதிய முன்னேற்றம் காண முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் DMK மற்றும் BJP இடையே கடந்த சில வாரங்களாக கடும் அரசியல் விமர்சனங்கள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. குடும்ப ஆட்சி, ஊழல், தமிழர் பண்பாடு போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.





