விஜய்க்கு எதிரா இப்பதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு ! இனி நாங்க சேர்ந்து டிரம் அடிப்போம் – வரிவிதிப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

IMG 20260206 180248

பிப்ரவரி 06, 2026; தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழகமாக மாறி இருக்கிறது. ஆளும் தி.மு.க அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். திறமை இல்லாத அரசாங்க தி.மு.க அரசு இருந்து வருகிறது.
தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியின் படி கொடுக்க வேண்டிய மகளிருக்கான ஆயிரம் ரூபாயை ஆட்சி 2 ஆண்டுகள் முடிந்த பின்னரே கொடுக்க ஆரம்பித்தார்கள். பொங்கலுக்கு இந்த வருடம் ரூ.3000 கொடுத்துள்ளார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கவில்லை. தேர்தல் வருவதினால் இந்த வருடம் பணம் கொடுத்துள்ளார்கள். இதே போல் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் வீதம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 20 கோடி ரூபாய் வந்துள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று தி.மு.க நம்புகிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் தி.மு.க.வினர் போட்டி போட்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் தி.மு.க ஆட்சியில் தற்போது 33 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதையெல்லாம் மறைப்பதற்காக தி.மு.க.வினர் டப்பா என்ஜின் என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர். வருகிற 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதனை திருவிழா போல் நடத்த உள்ளோம். இதில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மத்திய பட்ஜெட் மிக அழகாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு செமி கண்டக்டர் உள்பட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்களை இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு இருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் இங்கிருந்து கனிம வளங்களை எடுத்துச் சென்று விட்டு அங்கிருந்து கழிவுகளை இங்கு அனுப்பி வைக்கிறார்.விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதம் விவகாரத்தில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறார். இப்போது தான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்த்து டிரம் அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன் என கூறினார்.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »