கமுதி அருகே பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 54 பவுன் நகை கொள்ளை

கமுதி , ஜூன் 20: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Daylight Burglary Near Kamuthi: Thieves Loot 54 Sovereigns of Gold Jewellery from Locked House

கூடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்மூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமாதேவி. இந்த தம்பதியருக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ளனர். பால்மூர்த்தி வெளிநாட்டில் இருப்பதால் பூமாதேவி தனது குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார்.

வழக்கம்போல் பூமாதேவி விவசாயக் கூலி வேலைக்காகக் காட்டுக்குச் சென்றுள்ளார். குழந்தைகளும் காலையில் பள்ளிக்குச் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதனால் வீடு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது. இந்த நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

also : கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் மற்றும் ரொக்கப் பணம் 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

மாலை நேரத்தில் வேலை முடிந்து பூமாதேவி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பூமாதேவி உடனடியாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டிற்கு ராமநாதபுரத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைச் சேகரித்தனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.

இதனைத் தொடர்ந்து கூடக்குளம் கிராமம் மற்றும் கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *