சென்னை , மே 29: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மற்றும் பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி வழக்கறிஞர் வாசுகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மீதும், பெற்றோரைத் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கு செலுத்தியதாகவும், குழந்தைகளைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகச் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில், வெறும் செய்தி ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும் என்றும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் அதற்கென பிரத்யேகமாகத் தேர்தல் வழக்கு (Election Petition) மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், எனவே இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, குழந்தைகளைப் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாகத் தங்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் இந்த மனுவில் வைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், ஊழல் அல்லது பணப்பட்டுவாடா போன்ற முறைகேடு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரை முறையாக இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் கட்சிகளுக்கு எதிராகப் பொதுப்படையாக வழக்கு தொடர முடியாது என்றும் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபாலும் நீதிமன்றத்தில் இதே வாதங்களை முன்மொழிந்து, இந்த மனுவை நிராகரிக்கக் கோரினார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு குறித்து விரிவான பதிலளிக்க அவகாசம் தேவை என தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படி பதிலளிக்கும்படி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments