சென்னை , june 8: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நகர்ப்புற உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில்.’முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் 2026-2031′ (CMIUTM) என்ற புதிய தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மற்றும் நகராட்சி நிர்வாகம்.குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பணிகள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்.மாநிலத்தின் குடிநீர் விநியோகம்.கழிவுநீர் மேலாண்மை.நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
உள்கட்டமைப்பில் புதிய பாய்ச்சல்: ‘அர்பன் சேலஞ்ச் ஃபண்ட்’
மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் அம்ருத் (AMRUT).அம்ருத் 2.0.ஜல் ஜீவன் மிஷன் (JJM 2.0) மற்றும் தூய்மை பாரத இயக்கம் (SBM 2.0) போன்ற திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும்.பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவியுடன் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றமும் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. ரூ.397 கோடி டெண்டர் ஊழல் வழக்கில் CBI களம் இறங்கியது !
குறிப்பாக.கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அர்பன் சேலஞ்ச் ஃபண்ட்’ (Urban Challenge Fund – UCF) திட்டத்தின் கீழ்.தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் எவ்வித தொய்வுமின்றி.நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சிகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி.மாநிலத்தில் உள்ள 25 மாநகராட்சிகளிலும் வாரத்தின் 7 நாட்களும்.24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான (24×7) பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல்.146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளிலும் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தி.தினசரி குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்.இந்த இலக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக எட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கூவம்.பக்கிங்காம் கால்வாய்களைச் சீரமைக்க உத்தரவு
சென்னை மாநகரின் சூழலியல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் நீர்வழித்தடங்களை மீட்டெடுப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.தற்போது நடைபெற்று வரும் அடையாறு மறுசீரமைப்பு திட்டத்துடன் ஒருங்கிணைந்து.கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நீல-பசுமை வளாகங்கள் (Blue-Green Spaces) என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமையவுள்ள இத்திட்டத்தின் கீழ்.நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து மாற்றுப் பாதையில் திருப்புதல்.மாசுபாட்டைக் குறைத்தல்.கரைகளை பலப்படுத்துதல் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும்.அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கவும்.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தொழிற்சாலைகள்.வணிக நிறுவனங்கள் மற்றும் பூங்கா பராமரிப்பிற்கு மறுபயன்பாடு செய்வதன் மூலம் நீர்வள மேலாண்மையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
5 கோடி மரக்கன்றுகள்: பசுமை நகரங்களாக மாறும் திருச்சி.மதுரை
காலநிலை மாற்ற எதிர்கொள்ளும் திறன் கொண்ட நகரங்களை உருவாக்கும் நோக்கில்.2031-ஆம் ஆண்டிற்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பசுமை உள்கட்டமைப்பு மற்றும் திறந்தவெளி பொது இடங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன.சென்னை.கோயம்புத்தூர்.மதுரை.திருச்சிராப்பள்ளி ஆகிய முக்கிய நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வெள்ளத் தடுப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக்காக பிரத்யேகமாக ‘ஸ்பாஞ்ச் பூங்காக்கள்’ (Sponge Parks) அமைக்கப்படவுள்ளன.ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பல்லுயிர் மற்றும் சூழலியல் பூங்காக்கள் நிறுவப்படவுள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு.பசுமைப் பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தைப் பேணும் வகையில்.2031-ஆம் ஆண்டிற்குள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.பேரூராட்சிகளுக்குச் சிறிய அளவிலான மையங்களும்.பிராந்திய அளவிலான பகிரப்பட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு.வெறிநாய் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
நிதி ஆதாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு
முன்மொழியப்பட்டுள்ள முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டத்திற்கு (CMIUTM) தேவைப்படும் 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதியானது மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள்.நகராட்சிப் பத்திரங்கள் (Municipal Bonds).மத்திய-மாநில நிதிக்குழு மானியங்கள் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி ஆகியவற்றை ஒருங்கிணைத்து திரட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இத்தொலைநோக்குத் திட்டத்தைப் பாராட்டிய முதலமைச்சர்.”வெளிப்படைத்தன்மை.பொறுப்புணர்வு மற்றும் திறமையான கண்காணிப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.உலகத்தரத்திலான இந்த உள்கட்டமைப்புகள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார்.இ.ஆ.ப..நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி.இ.ஆ.ப..நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எம்.ஏ.சித்திக்.இ.ஆ.ப..பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்.இ.ஆ.ப.மற்றும் பல்வேறு வாரியங்களின் மேலாண்மை இயக்குநர்கள்.அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








