
Trichy , May 16 : திருச்சி அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி ICU, Ventilator, மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட பல அதிர்ச்சி குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
திருச்சி GH-ல் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு
திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் TVK MLA ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டது அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து அவர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார். “அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துகள் பல பகுதிகளில் இருந்து எனக்கு வந்தன. அதனால் தான் உண்மையான நிலைமை என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த Surprise Inspection நடத்தினோம்” என்று அவர் கூறினார்.
அவரது ஆய்வின் போது மருத்துவமனையின் தற்போதைய கட்டமைப்பு, அவசர சிகிச்சை வசதிகள், ICU மற்றும் Ventilator வசதிகள் இல்லாமை, மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல முக்கிய குறைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த ஆய்வு, திருச்சி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றிய தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மழைநீர் கசிவு பிரச்சனை
மருத்துவமனை கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடம் என ஆய்வின்போது தெரியவந்ததாக ரமேஷ் தெரிவித்தார். இதனால் பல பகுதிகளில் மழைநீர் கசிவு ஏற்படுகிறது என்றும், கட்டிட வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், மருத்துவமனை அமைந்துள்ள நிலம் HR & CE துறைக்குட்பட்டதாக இருப்பதால் கட்டிடங்களை இடித்து புதுப்பிக்கும் பணிகளிலும் பல சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக தேவையான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் முன்னேறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read ; முதல் அடியிலேயே அதிரடி காட்டிய TVK அமைச்சர் அருண்ராஜ்
பயன்படுத்த முடியாத இரண்டு கட்டிடங்கள்
மருத்துவமனை வளாகத்தில் தற்போது இரண்டு முக்கிய கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. அந்த கட்டிடங்களை சீரமைத்து கூடுதல் படுக்கை வசதிகளாக மாற்ற முடியும் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.
தற்போது மருத்துவமனையில் 85 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும், ஆனால் 150 முதல் 157 படுக்கைகள் வரை பயன்படுத்த அனுமதி இருப்பதாகவும் அவர் கூறினார். இருந்தபோதும் அந்த அளவுக்கு நோயாளிகளை ஏற்க தேவையான கட்டிட வசதிகள் இல்லாததால் அனுமதி இருந்தும் பயன்பாட்டில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை முந்தைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகள் வைத்திருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தினமும் 15 அவசர நோயாளிகள்.. ஆனால் ICU இல்லை
மருத்துவமனையில் தினசரி சராசரியாக 12 முதல் 15 வரை Emergency Cases வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 3 முதல் 5 பேர் வரை மிகவும் கவலைக்கிடமான நிலையில் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவ்வளவு அவசர நோயாளிகள் வருகிற நிலையிலும் மருத்துவமனையில் Ventilator வசதியும் ICU வசதியும் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருப்பதாக ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால் Critical Condition-ல் வரும் நோயாளிகளை வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது.
அதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். இந்த இடமாற்ற தாமதம் காரணமாக உயிர் ஆபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இங்கே ICU, Ventilator மற்றும் அதற்கான Manpower இருந்தால் நேரடியாக வரும் Critical Patients-ஐ இங்கேயே சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால் தற்போது அந்த அடிப்படை வசதிகளே இல்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 800 OP.. ஆனால் 6 டாக்டர்கள் மட்டும்
இந்த அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 600 முதல் 800 Out Patients வருவதாகவும், நோயாளிகள் வருகை தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்தது.ஆனால் அதற்கேற்ப மருத்துவர்கள் இல்லை என்பது மற்றொரு முக்கிய பிரச்சனையாக கூறப்படுகிறது. தற்போது General OP பார்க்கும் மருத்துவர்கள் மொத்தம் 6 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் ஒருவர் 24 மணி நேர பணி பார்த்த பிறகு அடுத்த நாள் விடுப்பு எடுப்பதால் Rotation Basis-ல் தினசரி 3 முதல் 4 மருத்துவர்கள் மட்டுமே செயல்படுகிறார்கள்.
அந்த குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகளை கவனிப்பது மிகவும் சிரமமான சூழ்நிலை என ரமேஷ் தெரிவித்தார். இதேபோல் நர்சுகள் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது. மொத்தம் 21 நர்சுகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அதிக பணிச்சுமையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவமனை மாற்றப்படுமா? ரமேஷ் விளக்கம்
மருத்துவமனை கட்டிடத்தை இடித்து புதிய மருத்துவமனை அமைக்க முடியாத சிக்கல்கள் இருப்பதால், மாற்று இடத்தில் முழு வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை அமைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பதிலளித்த ரமேஷ், “இது ஒரே நபர் முடிவு எடுக்கக்கூடிய விஷயம் இல்லை. அதிகாரிகளுடன் ஆலோசித்து, இங்கேயே மேம்படுத்த முடியுமா அல்லது மாற்று இடம் தேவைப்படுகிறதா என்பதை அனைவரும் இணைந்து முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் திரைப்படங்களில் காட்டுவது போல ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.













