
Delhi , May 11 : எரிபொருள் சிக்கனம், Work From Home, கார்பூலிங், வெளிநாட்டு செலவுகள் குறைப்பு உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இந்தியாவின் எரிபொருள் மற்றும் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மக்கள் பழக்கவழக்கங்களிலேயே மாற்றம் தேவைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தற்போதைய உலக சூழ்நிலை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக அமெரிக்கா – ஈரான் மோதல் சூழல் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Work From Home முறைக்கு மீண்டும் முக்கியத்துவம்?
கொரோனா காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட “Work From Home” அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை மீண்டும் முக்கியத்துவம் பெற வேண்டிய சூழல் உருவாகி வருவதாக பிரதமர் கூறியிருப்பது , சாத்தியமான துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும் என்றும், அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை கணிசமாக குறைக்க முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் நேருக்கு நேர் நடைபெறும் கூட்டங்களுக்கு பதிலாக Video Conferencing மற்றும் Online Meeting முறைகளை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிப்போடு நேரமும் செலவும் குறையும் என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
Metro, Electric Vehicle, Carpooling மீது கவனம் : நகர்ப்புறங்களில் வாகன பயன்பாட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் மக்கள் தனியார் வாகனங்களை தவிர்த்து Metro Rail சேவைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Electric Vehicle பயன்படுத்துபவர்கள் அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், தனியாக பயணம் செய்வதை விட Carpooling முறையை பின்பற்றுவது சிறந்த மாற்றாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.எரிபொருள் சிக்கனம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதன்படி வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள், வெளிநாடுகளில் நடைபெறும் திருமண விழாக்கள் போன்ற அதிக செலவான நிகழ்வுகளை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தேவையற்ற தங்கம் வாங்குவதை தவிர்ப்பதும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த அழைப்பு
சமையல் எண்ணெய், உரங்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மக்கள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதார அழுத்தத்தை குறைக்க அரசு மட்டுமல்லாது ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.








