ஈரோடு , ஏப்ரல் 8:, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ஒட்டுமொத்தமாக 131 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 71 மனுக்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளன..
தமிழகத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஈரோடு மாவட்டத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமன்றி, சுயேச்சை வேட்பாளர்களும் பெருமளவில் களமிறங்கியதால் வேட்புமனுத் தாக்கலின் போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான ஆய்வு மற்றும் பரிசீலனை நடைமுறை வழக்கத்தை விட மிகவும் தீவிரமாக அரங்கேறியது.
Also read : கிருஷ்ணகிரி TVK வேட்பாளர்கள் திடீர் மாற்றம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு
ஒவ்வொரு வேட்புமனுவும் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் தனித்தனியாகவும் நுணுக்கமாகவும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கடுமையான தணிக்கையின் முடிவிலேயே போதிய தகுதி இல்லாத மற்றும் விதிகளுக்குப் புறம்பான 71 மனுக்கள் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, வேட்பாளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த பெரும் குறைபாடுகள், சொத்து விவரங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களில் அளிக்கப்பட்ட தவறான தகவல்கள், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அத்தியாவசிய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாதது ஆகியவையே இதற்குக் முக்கிய காரணங்களாக அமைந்ததாகத் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







