மறைந்திருக்கும் புதையலை ஆய்வு செய்ங்க ! ஆதாரத்தை சர்வே எண்ணுடன் கொடுத்த நபர் ! ஆச்சரியத்துடன் அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.

.

டிசம்பர் 03/2025 : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 24 ம் தேதி திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் வழக்கம்போல நடைபெற்றது. வரிசையில் வந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தபடி இருந்தனர். இதில் திடீரென தனி நபர் ஒருவர் அளித்த மனு, ஆட்சியர் இளம் பகவத்தை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த விபரங்கள் ; நீருக்கடியில் புதைந்திருக்கும் பெரும் புதையல் மற்றும் கடல் வாழ் உயிரின படிமங்கள் குறித்தது ! குறிப்பாக அந்த பகுதிக்கான சர்வே எண் மற்றும் அரிய கடல்வாழ் உயிரின படிமங்களின் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டு இருந்தது தான் காரணம் ! இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பினார் மாவட்ட ஆட்சியர்.

விளக்கமாக…
தூத்துக்குடி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீருக்கடியில் கட்டமைப்புகள், கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் மற்றும் மிகப்பெரிய புதையல்கள் இருப்பதாகக் கூறி தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளார். மனுதாரர் வழங்கிய புகைப்பட ஆல்பங்கள் அடங்கிய கையேடுகளுடன் இந்த கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக அந்த மனுவில், புதையல்கள் மற்றும் படிமங்கள் இருப்பதாகக் கூறப்படும் இடங்கள் குறிப்பிட்ட சர்வே எண்களுடன் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அந்த விவரங்கள்… தூத்துக்குடி – பட்டினமருதூர்
சர்வே எண்கள்
200, 203, 204
பனையூர் (அணைக்கட்டு)
( குளத்தூர் தெற்கு கிராமம் )
215, 435 ஆகியவற்றின் கீழ் உள்ள பகுதிகளில் நீருக்கு அடியில் கட்டமைப்புகள், சிற்பிகள் மற்றும் சங்குகள் மற்றும் மிகப்பெரிய புதையல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்
ராஜேஷ் அளித்த மனு மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மனுவை பெற்ற மறுநாளே ராஜேஷின் மனுவில் உள்ள கூற்றுகளின் உண்மையை கண்டறிய உரிய ஆய்வு நடத்துமாறு கோரி கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையம் இயக்குனருக்கும்,
இந்திய புவியியல் ஆய்வு மையம் ஜிஎஸ்ஐ இயக்குனருக்கும் மாவட்ட ஆட்சியர் தனது கடிதத்துடன், மனுதாரர் ராஜேஷ் அளித்த மூல மனு மற்றும் அது தொடர்பான புகைப்பட ஆல்பங்களைக் கொண்ட இரண்டு கையேடுகளையும் இணைத்து அனுப்பியுள்ளார். இந்த ஆதாரங்கள், கோரப்பட்ட ஆய்வுக்கு அடிப்படையாக அமையும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »