60 மாதம் மிக மோசமாக ஆட்சி செய்த திமுகவிற்கு 50 நாட்கள் கூட பொறுமையில்லை: அனந்தஜித் அதிரடி!!

சென்னை: ஐந்து ஆண்டுகள் மிக மோசமாக ஆட்சி செய்துவிட்டு தற்போது புதிய அரசு அமைந்து 50 நாட்கள் கூட நிறைவடைவதற்குள் விமர்சனம் செய்யத் தொடங்குவது நியாயமற்றது என்று தமிழக வெற்றி கழகத்தின் (டிவிகே) மாநில செய்தி தொடர்பாளர் அனந்தஜித் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Ananthajith Slams DMK: "No Patience for Even 50 Days After 60 Months of Poor Governance"

தற்போதைய தமிழக அரசின் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் அரசியல் மோதல்கள் குறித்து விரிவாகப் பேசினார். அரசின் புதிய திட்டமான ‘சிங்கப்பெண்’ அதிரடி சிறப்புப் படை திட்டம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அனந்தஜித் இது முந்தைய ஆட்சிகளின் ‘அம்மா பெட்ரோல்’ அல்லது ‘Pink Petrol’ போன்ற வெற்றுப் பெயர் மாற்றமல்ல என்று தெளிவுபடுத்தினார்.

“பொதுவாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருந்தாலும் அங்கிருக்கும் பெண் அதிகாரிகளுக்கு வழக்குப் பதிவு செய்தல், FIR போடுதல், நீதிமன்ற விசாரணை, Charge Sheet தயாரித்தல் போன்ற Police ஒர்க் லோட் அதிகமாக உள்ளது.இதனால் அவர்களால் களத்தில் இறங்கிப் பணியாற்ற முடிவதில்லை. இதைக் களையவே இந்த ஆம்பிஷியஸ் ப்ராஜெக்ட்  கொண்டு வரப்பட்டுள்ளது.”

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக அவர் குறிப்பிட்டவை:

  • ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு: இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2,500 புதிய பணியிடங்கள்: இதற்கென பிரத்யேகப் பயிற்சி பெற்ற 2,500 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  • மஃப்ட்டி கண்காணிப்பு: பெண்கள் அதிகம் நடமாடும் விமன் காலேஜ் பஸ் ஸ்டாப், பீச், மால்கள் போன்ற பொது இடங்களில் காக்கி யூனிபார்ம் இல்லாமல் மஃப்ட்டியில் (Mufti) காவலர்கள் கண்காணிப்பார்கள்.
  • Body Cams பயன்பாடு: அத்துமீறல்களை உடனுக்குடன் நேரடி ஆதாரமாகப் பதிவு செய்ய பாடி கேமராக்கள் பயன்படுத்தப்படும். அவசரக் காலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு Safe House-க்குக் கொண்டு செல்வது இப்படையின் முக்கிய வேலை.

“எங்கள் அண்ணன் (டிவிகே தலைவர்) அடுத்த தலைமுறைக்குப் பொறுப்புள்ள தாய் மாமனாக, ஒரு குடும்பத் தலைவனின் பதபதைப்போடு சிந்தித்து பதவி ஏற்ற ஒரே மாதத்திற்குள் இந்த ஹோலிஸ்டிக் அப்ரோச் (Holistic approach) திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.ஆனால் இதை முந்தைய ஆளும்கட்சியின் IT விங் வதந்திகள் மூலம் கிண்டல் செய்யப் பார்க்கிறது,” என்று சாடினார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது ஆட்சியில் போதைப்பொருட்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதாகக் கூறியதை அனந்தஜித் மறுத்தார்.

“அவர்கள் தடுத்திருந்தால் எப்படி 15,000 ரவுடிகள் அன்நோட்டீஸ்டாக சுற்றிக் கொண்டிருந்திருக்க முடியும்? வீடுகளுக்குள் எப்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள Drugs  இருந்திருக்க முடியும்? அண்மையில் டிஜிபி அலுவலக பிரஸ் ரிலீஸ் படி சோதித்ததில் 15,000 ரவுடிகளில் 3,300 பேரைக் காணவில்லை. தேடியபோது அவர்கள் கிரைம் ஆக்டிவிட்டியில் இருந்தது தெரிந்து 840 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இதுதான் பிரிவென்ஷன். முந்தைய ஆட்சியில் லோக்கல் கவுன்சிலர்கள் இவர்களுக்கு அரணாக நின்றதால் போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை,” என்றார்.

மேலும் கடந்த காலங்களில் திருத்தணி, தரமணி ஆகிய இடங்களில் கஞ்சா கும்பலால் நடந்த வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய அவர் தற்போதைய கடுமையான நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாதத்தில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கருத்துச் சுதந்திரமும் மாரிதாஸ் கைது விவகாரமும்

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று அனந்தஜித் பதிலளித்தார்.

“சம்பந்தமே இல்லாத ஒரு Drug case நபரின் பெயரும் மற்றொரு நபரின் பெயரும் ஒன்றாக இருந்ததை வைத்து ஒட்டுமொத்த மக்கள் Mandate பெற்று நடக்கும் ஓர் ஆட்சியை அவதூறாகப் பேசக் கூடாது.ஜான் பிரிட்டோ என்பவரை ED விசாரித்துக் கொண்டிருக்கும்போது அவர் கமிஷனர் அலுவலகத்தில் வந்து தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிறார். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களுக்கான Deterrence தான் இந்த நடவடிக்கை. சட்டம் தன் கடமையைச் செய்யும் காட்டு தர்பார் நடத்த இங்கு இடமில்லை. இதேபோல் முந்தைய ஆட்சியில் கரூர் இன்சிடென்ட் தொடர்பாக யூடியூபில் வீடியோ போட்ட பசங்களை எத்தனை பேர் கைது செய்தீர்கள்? அப்போதெல்லாம் எங்கே போனது கருத்துச் சுதந்திரம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மின்சாரத் துறை குளறுபடிகளும் ஹார்ட் டிஸ்க் திருட்டும்

மின்சாரத் துறையில் நிலவும் தற்போதைய மின்தடைப் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக அனந்தஜித் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மின்சாரத் துறை ஊழல் தொடர்பான ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடி-க்கு மாறியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின் பற்றாக்குறையை மறைக்கவே அரசு இதைச் செய்வதாகக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த அனந்தஜித் “நாங்கள் பெங்களூரில் ஹார்ட் டிஸ்க் திருடியவனைத் தேடிப் பிடித்துக் கைது செய்கிறோம். இதில் குற்றம் உள்ளவர்கள் மட்டும்தான் இப்படிப் பதற்றமடைந்து பிரஸ் மீட் கொடுப்பார்கள்.திமுக ஆட்சியில் 2 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனது, சுகர் கோடவுன் சர்க்கரை முட்டைகள், ஃபைல்கள், ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனது மக்களுக்குத் தெரியும்,” என்றார்.

மின்சாரப் பற்றாக்குறை குறித்து அவர் மேலும் கூறுகையில்:

“ஜூன் மாதத்திலும் நிலவும் கடுமையான வெயில் காரணமாக பவர் கன்சம்ஷன்  பீக்கில் உள்ளது உண்மைதான். ஆனால் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்திக்காக  ஆன் பேப்பரில்  (On Paper) கூட ஒரு திட்டம் கூட ஏன் கொண்டு வரவில்லை? அரசாங்கம் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட் ₹3 முதல் ₹3.50-க்குள் கிடைக்கும். ஆனால் தனியார் நிறுவனங்களிடம் ₹9 முதல் ₹16 வரை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த கமிஷனுக்காகவே சொந்த மின் உற்பத்தியைப் பெருக்கவில்லை.”

தொடர்ந்து பேசிய அவர் தற்போது ஆங்காங்கே ஜங்ஷன் பாக்ஸ்களில் ஃபியூஸ்களைப் பிடுங்குவது 800 கிலோ காப்பர் ஒயர்களைத் திருடுவது, டிரான்ஸ்பார்மர்களைப் பழுதாக்குவது எனப் புல்லுருவிகள் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் கூறினார்.லோக்கல் பாடி எலக்டட் மெம்பர்கள் மற்றும் கவுன்சிலர்களின் தைரியத்தில் இத்தகைய சில்லறை வேலைகள் நடப்பதாகவும், இதற்கு ஒரே தீர்வு இந்த லோக்கல் பாடிகளை உடனடியாக டிசால்வ்  செய்துவிட்டு ஃபிரெஷ் எலெக்ஷன்  நடத்துவதுதான் என்றும் அனந்தஜித் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »