கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

image 313

குளித்தலை , May 14 : கரூர் குளித்தலை அருகே கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு. போலீஸ் தீவிர விசாரணை நடக்கிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்துக்குள் 42 வயது பெண் ஒருவர் நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு தோட்டத்தில் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் குறித்து வெளியான தகவல்கள் தொடர்ந்து புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.

Also Read : தமிழ்நாட்டில் IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம் முழு பட்டியல் வெளியீடு

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான சிவரஞ்சனி என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உடல் நிர்வாண நிலையில் இருந்ததும், கை கால்கள் கட்டப்பட்டிருந்ததும் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அருகே ரத்தக் கறைகள் மற்றும் ஒரு கத்தி கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவரஞ்சனியின் கணவர் சுரேஷ் திருச்சி பகுதியில் உள்ள பழக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்கிறார் என தெரியவந்துள்ளது. தம்பதியருக்கு 22 வயதில் ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

கடந்த 11ஆம் தேதி இரவு சிவரஞ்சனி வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மறுநாள் காலை அவரது தம்பி அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிவரஞ்சனி வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளிப்புற பாத்ரூம் சுவரில் ரத்தக்கறைகள் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த ரத்தக்கறைகளை பின்தொடர்ந்தபோது, வழியில் சிவரஞ்சனியின் செயின் கிடைத்துள்ளது.

அதன்பின் அவர்கள் கரும்பு தோட்டத்திற்குள் சென்றபோது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் ரத்தக்கறைகளுடன் சிவரஞ்சனி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடலுக்கு அருகே கத்தி ஒன்று இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆடைகள் அகற்றப்பட்டிருந்ததும், உடல் கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும், உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் இறுதி சடங்குகள் நடைபெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விசாரணையில் முக்கியமான தகவல் என்னவெனில், சிவரஞ்சனியின் நகைகள் எதுவும் காணாமல் போகவில்லை. இதனால் இந்த சம்பவம் கொள்ளை நோக்கில் நடந்த கொலை அல்ல என போலீசார் ஆரம்ப கட்டத்தில் சந்தேகிக்கின்றனர்.

அதே நேரத்தில், கொலையாளி கைகளால் தாக்கியும், கத்தி கொண்டு குத்தியும் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மொபைல் போன் உடலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் நேரில் சென்று உறவினர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் திருச்சி சரக டிஐஜி சக்கரவர்த்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு, குற்ற சம்பவம் குறித்து விளக்கம் கேட்டார்.

மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சிவரஞ்சனியின் செல்போன் கால் ஹிஸ்டரி உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தடயங்களும் போலீசார் ஆய்வில் எடுத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காவல் ஆய்வாளர்கள் கருணாகரன் (குளித்தலை), சுரேஷ்குமார் (நங்கவரம்), சுரேஷ் (லாலாப்பேட்டை) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கரூர் எஸ்.பி அலுவலகம், கரூர் டவுன் எஸ்.ஐ உள்ளிட்டோர் இணைந்து மொத்தம் ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளியை விரைவில் கைது செய்யும் நோக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »