வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்…
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டண ஆர்ப்பட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக, நெல்லை மேற்கு மாவட்ட திமுக மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகம்பெல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி புதிதாக இணைந்துள்ள மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை, மாநகர செயலாளர்கள் சுப்பிரமணியன், தினேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஞானதிரவியம், பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணிக்கட்சியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு