நெல்லை , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டித் திருக்கோயில் வளாகத்தைப் பொலிவூட்டும் பணிகளும் தேர்களைப் பராமரிக்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்காகச் சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய ஐந்து தேர்களும் தூய்மை செய்யப்பட்டுத் தயார் நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதில் சுமார் 450 டன் எடையும் எண்கோண அமைப்பும் கொண்ட நெல்லையப்பர் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தேரைத் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை வீரர்கள் நவீன உபகரணங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி முழுமையாகத் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
ALso : மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்
தேரின் மரச் சிற்பங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் சேதமடையாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். தேர்கள் மட்டுமன்றி நெல்லையப்பர் கோயிலின் உள் பிரகாரங்கள், வெளிப்பிரகாரங்கள் மற்றும் தூண் மண்டபங்கள் ஆகிய அனைத்துப் பகுதிகளும் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு தூய்மைப் படுத்தப்பட்டு வருகின்றன. திருவிழா நாள்களில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருக்கும் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்எஸ்சி சிஜிஎல் (SSC CGL) போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நேரடி ஆன்லைன் வகுப்புகள் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







