ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்.

அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை, அப்பனை தரிசனம் செய்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

நாயன்மாா்களால் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 04 ம் தேதி அன்னை காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 15 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசு காட்சி விழாவின் 11வது நாள் வெள்ளிக்கிழமையான இன்று நண்பகலில் நடைபெற்றது.

இந்த வைபவத்தை முன்னிட்டு நேற்று இரவு காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு கம்பா நதி காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். அங்கு காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி விபூதி அலங்காரத்தில் கையில் கமண்டலம், ஜெபமாலையுடன் ஒற்றை காலில் நின்று தவக்கோலத்தில் காட்சி அளித்தாா்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

அன்னை காந்திமதிக்கு காட்சி தர வெள்ளி ரிஷப வாகனத்தில் ஏழுந்தருளிய சுவாமி நெல்லையப்பா் நெல்லை கோவிந்தராஜபெருமாள், திருஞான சம்பந்தர் ஆகியோருக்கு கம்பா நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், நீராகவும் காட்சி அளித்தாா். அதனை தொடா்ந்து காட்சி மண்டபத்தில் காத்திருந்த சுவாமி நெல்லையப்பரை காண அன்னை காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

அங்கு சுவாமியை வலம் வந்த காந்திமதி அம்பாளுக்கும் சுவாமிக்கும் மாலை மாற்றுதல்,
புதுவஸ்திரம் சாற்றுதல், பழவகைகளை சமா்பித்தல் போன்றவைகள் நடைபெற்று மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு ரதவீதிகள் வழியாக சுவாமி அம்பாள் திருக்கோயிலை வந்தடைந்தனா். நாளை அதிகாலை 4 மணி அளவில் அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண திருவிழா நடைபெறுகின்றது. அதனை தொடா்ந்து மாலையில் மூன்று நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »