குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில் வரும் குடிநீரும் கொழு கொழுவென கலங்கலாக வருது – வேதனையை கொட்டும் நெல்லை மாநகரம் அன்பு நகர் குடியிருப்புவாசிகள் !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை மாநகராட்சியில் நடந்தது ! நடக்கிறது !! நடந்து கொண்டே இருக்கிறது !!! என 3 காலங்களையும் கடந்து நடைபெறுகிறது பாதாள சாக்கடை திட்டம். இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகேயே உள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், கடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது. சாலையில் பொங்கி வழியும் கழிவு நீர், அருகில் குடிநீர் பிடிக்கும் குழாயை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் குழாயில் குடிநீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. இது மேலும் ஆபத்தை எர்படுத்துகிறது. மேலும் இப்பகுதி குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீரும், கழிவு நீர் சேர்ந்து, கொழு கொழுவென மிகவும் கலங்கலாக இருப்பதால் அதனை பயன்படுத்தவே முடியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் பிறந்து 20 வருடங்களாக அன்பு நகர் பகுதியில் இதுவரை எந்த ஒரு மேம்பாட்டு திட்டங்களும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்த சாலையே, இரண்டு முறை குடிநீருக்காகவும், இரண்டு முறை பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் என நான்கு முறை தோண்டப்பட்டுள்ளது. ஆனால் நடுவில் மட்டும் சிறிய அளவில் சிமெண்ட் சாலை அமைத்து விட்டு சாலை போட்டதாக அறிவித்து விட்டார்கள். சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது.

மாலை நேரங்களில் அதிகமான கொசு தொல்லையால் இந்த பகுதியில் இருக்க முடியாது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் ! எங்கள் பகுதியில் நடக்க முடியாத அளவில் சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அதற்கும் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கக்கூடிய கோரிக்கை என வேதனையுடன் தெரிவித்தனர்.

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

மக்களின் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வில்சன் மணித்துரையிடம் கேட்டபோது..
பாதாள சாக்கடையை பராமரிக்கும் கேம்ஜெட் இயந்திரம் மாநகராட்சியிடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம் இதுவரை வரவில்லை இன்று வந்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள் வந்ததும் உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சனை சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »