ஈரான் போர் சூழலில் அதிர்ச்சி தகவல்: Supreme Leader மொஜ்தபா கமேனி Unconscious நிலையில் உள்ளாரா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கடுமையான போர் சூழலில், ஈரான் நாட்டின் தற்போதைய Supreme Leader மொஜ்தபா கமேனி குறித்து வெளியாகியுள்ள தகவல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் தகவல்களை மேற்கோள் காட்டிய அறிக்கைகளின்படி, கமேனி தற்போது மயக்க நிலையில் (unconscious) இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Supreme Leader மொஜ்தபா கமேனி Unconscious நிலையில் உள்ளாரா?

இந்த தகவலின்படி, கமேனி கோம் (Qom) நகரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் கடுமையான உடல்நிலை காரணமாக அரசின் முக்கிய தீர்மானங்களில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

போர் தாக்கம் மற்றும் பின்னணி

2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில், முன்னாள் Supreme Leader அலி கமேனி உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராக பதவி ஏற்றார்.

ஆனால் அந்த தாக்குதலிலேயே மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அவர் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாததும், வீடியோ ஆதாரங்கள் இல்லாமையும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஆட்சியில் குழப்பம்

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டால், ஈரான் நாட்டின் நிர்வாக அமைப்பில் பெரிய குழப்பம் உருவாகும் நிலை உள்ளது. முக்கியமாக, போர் காலத்தில் தேசிய பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகள் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், தலைவரின் இல்லாமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சில தகவல்களின் படி, கமேனி சார்பாக வெளியிடப்படும் தகவல்கள் நேரடியாக அவரால் அல்லாமல், மற்ற அதிகாரிகள் அல்லது அமைப்புகள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இது ஆட்சியின் உண்மையான கட்டுப்பாடு யாரிடம் உள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

உலகளாவிய தாக்கம்

இந்த நிலைமை உலக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே நடைபெறும் போர் மேலும் தீவிரமடையும் சூழல் காணப்படுகிறது. எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச பாதுகாப்பு சவால்கள் போன்றவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மொஜ்தபா கமேனி உண்மையில் மயக்க நிலையில் உள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் வெளியாகியுள்ள இந்த தகவல்கள், ஈரான்அரசியல் அமைப்பில் பெரிய மாற்றங்களுக்கும், உலகளாவிய அரசியல் சூழலுக்கும் வழிவகுக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »