திருச்சி காவல் துறை குடியிருப்பு அருகே இளைஞர் கொலை
திருச்சி: பீம நகர் மார்சிங் பேட்டை காவல் துறை குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பீம நகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (24). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில், ஒரு கும்பல் இளைஞர் ஒருவரை விரட்டி சென்றது. பாதுகாப்புக்காக அவர் காவலர் குடியிருப்பிற்குள் நுழைந்தாலும், கும்பல் விராமாமல் தொடர்ந்து விரட்டிச் சென்று கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த பட்டப்பகல் கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று காலை நடந்த இச்சம்பவத்தில், ஐந்து பேர் கொண்ட கும்பல் தாமரைச்செல்வனை ஓட ஓட விரட்டி அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உயிரிழக்கச் செய்தனர். சம்பவ இடம் காவல் துறை குடியிருப்பு அருகே என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கினர். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.






