
டிசம்பர் 16-2025 தேனி ; தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
இந்நிலையில் இந்த பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகர் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
எனது தந்தை பராசக்தி படம் நடிப்பதற்கு முன்பு பெரியகுளத்தில் உள்ள தியேட்டரில் தங்கி நாடகம் நடத்தினார் அவரை பெரியகுளம் மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய திரைப்பட நடிகர் பிரபு கூறும் போது…

எனது தந்தை சிவாஜி கணேசன் பராசக்தி படம் நடிப்பதற்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹீம் தியேட்டரில் ஆறு மாதம் குடியிருந்தார். அவரின் நாடகங்கள் அங்கு நடத்தப்பட்டது. அப்போது பெரியகுளம் மற்றும் தேனி மக்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனர். எனது அப்பா மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்புதான் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து இருக்கிறது எனது மகனையும் நிற்க வைத்திருக்கிறது என பழைய நினைவுகள் குறித்து பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி விட வேண்டும் அப்போது தான் அவர்கள் நன்றாக வருவார்கள் என தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் பெற்றோர்கள் ஆசிரியர்கள், பிரபுவுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.






