
8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் இயக்கத்தை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்..
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 14 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 14 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 166 நகர பேருந்துகள் இதுவரை இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே 47 புதிய நகர பேருந்துகளும், 39 புதுப்பிக்கப்பட்ட நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ரூபாய் எட்டு கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 14 புதிய நகர பேருந்துகள் கீழ்க்கண்ட வழித்தடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் திருநெல்வேலியில் இருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
1.புறவழிச்சாலை கிளையிலிருந்து,
நெல்லை சந்திப்பில் இருந்து களக்குடி – 4B, கல்குறிச்சி – 9A,
தெற்கு செழிய நல்லூர் – 9 F, காட்டாம்புளி – 9 S,
நெல்லை டவுணில் இருந்து மணப்படைவீடு – 12 M
என்ற தடங்களில் ஐந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- கட்டபொம்மன் நகர் கிளையிலிருந்து,
நெல்லை டவுண் – பற்பநாதபுரம் 15D,
நெல்லை டவுண் – சாந்திநகர் 12B,
நெல்லை சந்திப்பு – பூவாணி 16F,
நெல்லை சந்திப்பு – கேடிசி குடியிருப்பு 13A,
நெல்லை சந்திப்பு – குப்பகுறிச்சி மேட்டூர் 9P என இந்த வழித்தடங்களில் 5 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சேரன்மகாதேவி கிளையில் இருந்து..
நெல்லை சந்திப்பு – வீரவநல்லூர் 7i,
நெல்லை சந்திப்பு – மேலச்செவல் 10L,
சேரன்மகாதேவி – நெல்லை சந்திப்பு 10N,
சேரன்மகாதேவி – நெல்லை சந்திப்பு 7J இந்த வழித்தடங்களில் நான்கு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திமுக நெல்லை மாநகர மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய 14 பேருந்துகளின் இயக்கத்தினை தொடர்ந்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
இந்த புதிய 14 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் மக்களின் போக்குவரத்து தேவைகள் மற்றும் நெருக்கடிகள் ஓரளவு சமன் செய்யப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் கிராம மக்கள்.






