
டிசம்பர் 21.2025 ; நெல்லை :
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழரின் பண்பாடு தனித்துவமானது. தமிழரின் பண்பாட்டுக்கு பல இலக்கியங்கள் உள்ளது. ஆனால் அதனை வரலாற்றுச் சான்றாக மாற்றுவதற்கு அறிவியல் ரீதியாக தொல்லியல் சான்றுகளை உருவாக்கவே அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழரின் வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வரும் ஆய்வுகள் எதுவும் நடக்கக்கூடாது அதனை அறிவியல் பூர்வமாக வெளியிட விடக்கூடாது என்ற எண்ணத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வெறுப்போடு இருப்பவர்களை, தமிழர்களை எதிர்த்து போராடுபவர்களை உறுதியோடு எதிர்த்து போராடி வருகிறோம்.
இது 2000 ஆண்டு கால சண்டை, இதில் நாம் தோற்க மாட்டோம் ! நாம் பல சான்றுகளை அடுக்கடுக்காக வெளியிட்டு வருகிறோம். அறிவியல் சான்றுகள் மட்டும் வெளியிட்டால் போதாது என்பதற்காக தான் அறிவியல் சான்றுகளை மக்கள் மன்றத்தில் வைக்க அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 2021 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை, நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு அதில் கிடைத்த பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து வைத்து விட்டோம். பிரதமரும், நிதி அமைச்சரும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும் என இந்த விழாவின் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தமிழுக்கு, தமிழர் வரலாற்றுக்கும் சாட்சியாக தான் கீழடியும், பொருநை அருங்காட்சியகமும் விளங்கி வருகிறது. திராவிட மாடல் அரசு என்பது ஒரு கட்சியின் அரசு கிடையாது ஒரு இனத்தின் அரசாக செயல்படுகிறது. வெளியில் நம்மை எதிர்ப்பவர்கள் கூட தமிழர்களுக்கு போராடுபவர்கள் தமிழர் என்றால் திமுக தான் என்பதை மனதில் வைத்து பாராட்டுகிறார்கள். உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும். மக்களுக்கு செய்யக்கூடிய திட்டங்களுக்கு நேர்மறையாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது. மகாத்மாகாந்தி பெயரை நீக்கிவிட்டு இந்த திட்டத்திற்கு மக்களுக்கு புரியாத ஹிந்தி பெயரை வைத்துள்ளனர். மதச்சார்பின்மை, மத ஒற்றுமை என்றால் பாஜகவிற்கு பிடிக்காது. அதனால் அதனை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி பேசிய காந்தியின் பெயரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வைக்க அவர்களுக்கு பிடிக்கவில்லை ! காந்தியின் பெயரை நீக்கி விட்டார்கள். அவரது பெயரை நீக்கியது மட்டும் இல்லாமல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலனையும் அழித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்போது மொத்தமாக மூடு விழா கண்டுவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் இந்த திட்டம் தொடர்பாக ஒரு நாள் கூட விவாதம் நடத்தவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தியது வேளாண் பணி செய்யும் மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை நிறுத்துவதால் மிகப்பெரிய வரலாற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனைவரும் தெரிவித்து வருகிறார்கள் ஆனால் தன்னை விவசாயி என சொல்லிக் கொண்டிருக்கும் போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி இதுவரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. த்த்திமுகவும் போராட்டம் நடத்தியது. ஆனால் எந்த பாதிப்பும் இந்தத் திட்டத்தால் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சொன்னார் தற்போது பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் பாஜக அரசு அடிக்கும் போது கூட அதிமுக அநியாயத்திற்கு துணை போவதை மக்கள் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள் மத்திய அரசு எத்தனை பாதிப்புகளை செய்தாலும் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் நம்மை எதிர்ப்பவர்கள் கூட நம்மை பாராட்டுவது தான் நமது கெத்து அடுத்தும் திமுக ஆட்சி தான் அமையப்போகிறது நமது ஆட்சியை பல மாநிலங்களில் பாலோ செய்கிறார்கள் மகளிர் உரிமை தொகையை தற்போது கூடுதலாக்கி வழங்கப்பட்டு வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுத்த ரூபாயை திருப்பி கேட்கிறார்கள் நாங்கள் திரும்ப கேட்கவில்லை கூடுதலாக்கி கொடுத்து வருகிறோம் எத்தனை தடைகள் வந்தாலும் உங்கள் ஆதரவோடு இந்த ஆட்சி தொடரும் திராவிட மாடலால் தமிழ்நாடு வளரும் தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்தார்.






