
டிசம்பர் 16.2025 ; திருநெல்வேலி : திமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த மாவட்ட தலைவர் ! ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அரசியலில் பரபரப்பு ! சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன் என்பதனால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றசாட்டு…
நெல்லை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பவர் மாவட்ட வர்த்தக அணி பதவியில் இருந்து விலகுவதாக முதல்வருக்கு கடிதம் கொடுத்து இருக்கிறார்.
பல கோடிகளை செலவு செய்து பல்வேறு பணிகளை செய்திருக்கும் நிலையில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எண்ணிலடங்கா நலத்திட்ட பணிகள் நான் செய்திருக்கிறேன். நான் சிறுபான்மை சமூகத்தினை சார்ந்தவன் என்பதினால் நெல்லை கிழக்கு மாவட்ட அனைத்து தலைமை பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்களால், ராதாபுரம் தொகுதியில் சமீப காலமாக நடைபெறும் எந்தவிதமான நலத்திட்ட பணிகளுக்கும் என்னை அழைப்பதில்லை.

என்னுடைய சொந்த ஊராட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கூட எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. ஆகவே நான் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அப்போதைய நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனின் தீவிர ஆதரவாளராக ரகுமான் இருந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் என்பவர் நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவருடைய எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்ற நிலையில் அதற்குப் பிறகு பல்வேறு நிகழ்ச்சியில் ரகுமான் புறக்கணிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கிரகாம்பெல் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். அந்தப் பதவி தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுவின் மகனான அலெக்ஸ் அப்பாவிற்கு வழங்கப்பட்டது.

அலெக்ஸ் அப்பாவு வகித்து வந்த மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பதவியாவது தனக்கு கிடைக்கும் என்று நிலையில் அந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் இன்று மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து இருக்கிறார். மாவட்ட பொறுப்பில் இருக்கும் ஒருவர் விலகல் கடிதம் கொடுத்தது ராதாபுரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






