நெல்லை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !
தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கு சீர்திருத்த சிறப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இந்த வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் இந்த திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழும் என தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதை எளிமையாக்கும் முயற்சியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் இது இந்த நேரத்தில் மக்களுக்கு தங்களது வாக்கு சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும் என கூறுகிறார். அதன்படி 2002/2005 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்காக நமது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முயற்சியில் ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த QR code மூலமாக தமிழில் தங்களது 2002/2005 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் தமிழில் மட்டும் தான் விபரங்களை அளித்து கண்டுபிடிக்க இயலும். மேலும் இதில் வாக்காளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர்களது பாலினத்தையும் குறிப்பிடும் பட்சத்தில் 5 வினாடிகளில் அந்த தொகுதியில் அதே பெயருடைய அனைத்து வாக்காளர் விவரங்களும் அறிய முடியும். அதன் பின் தகப்பனார்,தாய், தாத்தா,பாட்டி பெயரை தேடி எளிதாக கண்டுபிடித்து விடலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தேடும் நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.






