
டிசம்பர் 19.2025;நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார். இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்பு 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பட்டியலின்படி 12 லட்சத்து 3 ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்பு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை முன்னிலையில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார் இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் திருத்த சிறப்பு பணிக்கு முன்பு 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து ஆண் வாக்காளர்கள்
6 லட்சத்து 91 ஆயிரத்து 026 பேரும், பெண் வாக்காளர்கள்
7 லட்சத்து 27 ஆயிரத்து 110 பேரும் , மூன்றாம் பாலினத்தவர் 161 பேரும் என 14 லட்சத்து 18 ஆயிரத்து 325 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் தீவிர திருத்த பணிகளுக்கு பின்
புதிய வரைவு வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 12லட்சத்து 3ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 88 ஆயிரத்து 630 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 594 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 144 பேரும் அடங்குவர்.

சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலின் படி நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 42 ஆயிரத்து 501 வாக்காளர்களும், பாளையங்கோட்டையில் 36 ஆயிரத்து 57 வாக்காளர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 54,270 வாக்காளர்களும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 40 ஆயிரத்து 20 வாக்காளர்களும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் 42 ஆயிரத்து 119 வாக்காளர்கள் என மொத்தம் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலின்படி 2லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்குசாவடிகளும் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்பு 1490 வாக்கு சாவடிகள் இருந்தது. தற்போது 190 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, வாக்குச்சாவடி இணைப்பு , இடமாற்றம், பெயர் மாற்றம் செய்யப்பட்டது என மொத்தம் 1678 வாக்கு சாவடிகள் தற்போது உள்ளது என தெரிவித்துள்ளார்.






