
டிசம்பர் 16-2025 திருவண்ணாமலை ; 30 மாதங்களாக வாடகை பாக்கி ! அரசு பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர்.ஷட்டர் வெளியே காத்திருந்த சார்பதிவாளர்…
திருவண்ணாமலை மாநகரின் புறவழிச்சாலையில் உள்ள விஜயா மஹாலில் செயல்பட்டு வரும் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 30 மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாததால் பத்திரப்பதிவு அலுவலக கட்டிட உரிமையாளர் பதிவாளர் அலுவலக ஷட்டருக்கு பூட்டு போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் சார் பதிவாளர் தென்றல் மற்றும் ஊழியர்கள் வெளியே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாநகர் மற்றும் கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் நிலம், வீடு, கடை, கட்டிடம் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும், விற்பதற்கும் சார்பதிவாளர் அலுவலகத்தை நாடி வருகின்றனர். அவ்வாறு திருவண்ணாமலை மாநகரில் உள்ள புறவழிச்சாலை விஜயா மாலில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகம் இரண்டில் கடந்த 30 மாதமாக கட்டிடத்தின் உரிமையாளருக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் இன்று கட்டிடத்தின் உரிமையாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி, பூட்டு போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை தந்த சார்பதிவாளர் தென்றல் மற்றும் ஊழியர்கள் ஷட்டர் பூட்டு போட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், அது மட்டுமில்லாமல் ஷட்டர் முன்பு கடந்த 30 மாத காலமாக பத்திர பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு உண்டான வாடகை பாக்கி செலுத்தாததால் கட்டிடத்தின் உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்தி விட்டு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருப்பதைக் கண்டு சார்பதிவாளர் தென்றல் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியுடன் வெளியே நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுத் துறையைச் சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகம் 30 மாத காலமாக வாடகை பாக்கி செலுத்தாததால், கட்டிடத்தின் உரிமையாளர் ஷட்டரைப் பூட்டிய அவல நிலை நீடித்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






