வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் என்னும் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் புயலின் வேகம் இருந்தது. ஆனால் மதியம் வேளையில் புயல் வேகம் குறைந்து மணிக்கு நான்கு கிலோமீட்டர் என நகர்ந்து வந்தது. புயலின் வேகம் குறைந்ததால் தொடர்ந்து மழை இருக்கும் என மாநில மையம் அறிவித்துள்ளது. வரும் 30ம் தேதி அதிகாலையில் டிட்வா புயல், வடதமிழகம் அதனை ஒட்டி உள்ள வடக்கு ஆந்திர பகுதியில் புயல் கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம்

கணித்துள்ளது. இதன் காரணமாக காவிரி டெல்டா படுகை மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதன்படி நாகை தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காரைக்காலிலும் மிக அதிகமான கன மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதேசமயம் தஞ்சை அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தனுஷ்கோடி ராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மழையும் பெய்து வருகிறது. பாம்பன் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று விசி வருகிறது சூறைக்காற்றால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாம்பன் பாலத்தில் ஓட்டுவது சிரமமாக இருப்பதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தொடர் கடல் சீற்றம் காரணமாக வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப் படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல்: கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு..
காரைக்காலில் கனமழை பாதிப்புகள் தொடர்பாக புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070, 1077 என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்ல ஸ்டாலின் உத்தரவு : டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட், மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் அதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார் மேலும் தாழ்வான பகுதிகளை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்கள் மழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






