ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி..

	ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

கோவை, நவம்பர் 20 –
கோவை மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபுதூர், பாறைப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் பதிவான பகுதிகளில் கடந்த மாதம் கூண்டுகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். சுமார் ஒரு மாதக் காலம் அவதானித்தபின், நேற்று இரவு அந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

	ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

பிடிபட்ட சிறுத்தை டாப்ஸ்லிப் அருகே உள்ள உலாந்தி வனச்சரகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை பிடிபட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதே பகுதியில் இன்னொரு சிறுத்தை சுற்றித்திரிந்த காட்சி ஒடையகுளம் பேரூராட்சி சார்பில் நிறுவப்பட்ட சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

	ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

இதனால் மீண்டும் பீதியடைந்த மக்கள், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சிறுத்தையையும் பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »