ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா ? இல்லையா ! என்பதை முடிவு செய்யும் டெஸ்ட், நெல்லையில் அறிமுகம்…

டிசம்பர் 26,2025 : திருநெல்வேலி; நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்படும் சூர்யா மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க பல்வேறு நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதனால் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு வெளிநகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இருதயத்தில் பெரிய ரத்த நாளங்களில் மட்டுமின்றி மிகச்சிறிய கிளை ரத்த நாளங்களில் ( கரோனரி மைக்ரோ வாஸ்குலர் ) அடைப்பு போன்ற பிரச்சனை இருந்தால் கண்டறியும் சிஎம்டி என்ற பரிசோதனை வசதி உள்ளது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்வது என்பதாகும் அடைப்பை நீக்கிய பின்னர் அதன் கிளைகளில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பது தெரியாது ! குறிப்பாக சிறிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ள ஒரு நோயாளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அல்லது பைபாஸ் சிகிச்சை அளித்தால் அது உரிய பலனை தராது. ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா இல்லையா என்பதை இந்த டெஸ்ட் மூலம் முடிவு செய்ய முடியும் இந்த பரிசோதனை ஆனது முதல் முறையாக தென் மாவட்ட அளவில் சூர்யா மருத்துவமனையில் செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்ட் போல் டாப்ளர் வயர் உடன் செலுத்தி கண்டறியப்படுகிறது. இதில் அடைப்பு குறைபாடு குறைந்த அளவில் இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்ய முடியும். இவ்வாறு கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் ஆஞ்சியோ பிளாஸ்ட் அல்லது பைபாஸ் சிகிச்சை என்ற தேவையற்ற சிகிச்சையை தவிர்க்க முடியும். இருதய குறைபாடு உடைய அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்வது தற்போதைய மருத்துவ முன்னேற்றத்தில் இருதய பாதிப்பு ஏற்படும் 80% பேருக்கும் மருந்து மாத்திரைகள் மூலம் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

சூர்யா மருத்துவமனையில் சமீபத்தில் 70 வயது முதியவருக்கு சிஎம்டி நவீன தொழில்நுட்ப பரிசோதனை மூலம் இதயத்தின் மிகச் சிறிய ரத்த நாளங்களை நுட்பமாக ஆராய்ந்து மருத்துவ நிபுணர்கள் சரி செய்தனர். அதன் மூலம் முதியவரை இயல்பான வாழ்க்கை முறைக்கு மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜிம் செல்லும் இளைஞர்கள் கவனத்திற்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதய நோய் மருத்துவ நிபுணரான டாக்டர் சீனிவாசன் கூறுகையில்.. உடற்பயிற்சி கூடம் சென்று முறையான பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 6 பேக் ஆர்வம் உடையோர் உடலை கடுமையாக வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத வகையில் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஜிம் செல்ல துவங்கும் முன் இளைஞர்கள் தங்கள் உடல்நிலை, இருதய செயல்பாடுகளை உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட போதுமான இடைவெளியில் உடலை பழக்கப்படுத்தி அடுத்தடுத்த கட்டமாக மேற்கொள்வது நல்லது என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வடிவேல் தென்மண்டல இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »