
நெல்லை : டிசம்பர் 6/2025; மோட்டார் வாகனங்களுக்கு தகுதி சான்று பெறுவதற்கான கட்டணத்தை, மத்திய அரசு பல மடங்காக உயர்த்தியுள்ளது ! இதனை கண்டித்து வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல்மோட்டார் தென் தமிழகம் முழுவதும் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு.. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டமைப்பு வேண்டுகோள்…
.
மோட்டார் வாகனங்களுக்கு தகுதி சான்று பெற வருகின்ற 17ம் தேதி முதல் வாகனத்தின் மாடலுக்கு ஏற்ப கட்டணங்களை அரசு உயர்த்தி உள்ளது. ஏற்கனவே லாரிகளுக்கு ரூ.850 செலுத்தி தகுதி சான்று புதுப்பித்து வந்த நிலையில் தற்போது அதிகபட்சமாக 28,220 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன், லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த கட்டண உயர்வு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏற்கனவே லாரி தொழில் உதிரி பாகங்களின் விலை உயர்வு, டயர் விலை மற்றும் டீசல் விலை சுங்கச்சாவடிகளின் தொடர் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக நலிந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு உயர்த்தி உள்ள கட்டண உயர்வு எங்கள் தொழிலை மேலும் பாதிப்படைய செய்யும் இதன் காரணமாக தென் தமிழகம் முழுவதும் வருகின்ற 9ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்த அளவில் 5 ஆயிரம் லாரிகள் உள்ளதாகவும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாக 5 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனை சார்ந்து பணிபுரியும் 25 ஆயிரம் பேர், மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 9 ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொது விநியோகப் பொருட்கள் கொண்டு செல்வது பாதிக்கப்படும்.

இது பொது மக்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இதனை தவிர்க்க முடியாமல் நாங்கள் செயல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்றவை இந்த உயர்வை நிறுத்தி வைத்துள்ளார்கள். தமிழக அரசும் இதை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதனை அரசு செய்ய வேண்டுமென என்று வேண்டுகோளும் விடுத்தார்.






